| | வேய்த்தோடிச் சிலர்வீர வாகுபோர் | | | மேயினனென் றுரைப்பத் தீயோன் | | | தாய்த்தாக்கு மடங்கலென வுயிர்குடிப்ப | | | லெனச்சீறிச் சார்ந்தான் முன்போர் | | | தேய்த்தார்ந்த புகழவுணர் தெழித்தடுத்து | | | நேர்ந்தனர்வன் சிலம்பி னாண்மை | | | மாய்த்தானைத் தொழுதுவிறற் பூதருமார்த் | | | தனர்வெகுண்டு மலைக்க லுற்றார். |
(இ - ள்.) இங்ஙனம் இருபடையும் நேர்ந்ததை அறிந்துசென்று சில வொற்றர்கள் வீரவாகு என்பான் போரின்கட் பொருந்தினானென்று சொல்ல, தீயோனாகிய பானுகோபன் தாவி மோதுகின்ற சிங்கம்போல உயிரை யுண்ணுவே னென்று சீறுதல்செய்து பொருந்தினான். முன்னர்ப் போரின்கட் பகைவரை அழித்தலா னிறைந்த புகழை யுடைய அவுணர்கள் வீரமுழக்கஞ் செய்து பொருந்தினர். வலிய கிரவுஞ்சமலையின் ஆண்மையைக் கெடுத்தவனாகிய முருகனைத் தொழுது வலியையுடைய பூதர்களும் ஆர்த்தனராகிச் சீற்றமுற்றுப் போர்செய்யத் தொடங்கினா ரென்க. (வி - ம்.) வேய்த்தல் - ஒற்றியறிதல். தாய் - தாவி. தெழித்து - முழக்கி. (199) வேறு | | குழாக்க ளிற்றவுணர் கோனை யாற்றல்வளர் | | | பூதர் கோனெதிர்கொ லைக்களம் | | | விழாக்க ளம்புரைய மெய்ம்ம லிந்துவகை | | | மேவி யாண்மையுளங் கேண்மையின் | | | வழாக்க டுப்பொடுது ரப்ப வட்டமொடு | | | வார்ந்தி லங்குவடி வாள்கரந் | | | தழாக்கி ளர்ந்துவரு சாரி கைத்தொழிற | | | ழைப்ப வாடலொரு பாலெலாம். |
(இ - ள்.) கூட்டமாகிய யானைப் படையினையுடைய அவுணர் தலைவனாகிய பானுகோபனை வன்மைபொருந்திய பூதர் தலைவனாகிய வீரர் எதிர்ந்த போர்க்களமானது விழவெடுக்குங் களத்தினையொப்ப மெய்ம்மலியுவகை மேவப்பெற்று உள்ளமானது ஆன்டண்மையை கட்பின் வழுவாதவாறு வேகத்துடன் செலுத்தப் பலகையுடன் நீண்டு விளங்குகின்ற கூரிய வாளைக் கையிற்றழுவிக் கிளர்ச்சியுற்றுப் பொருந்துகின்ற சாரிகைத் தொழில் மிகப்போர் செய்த லொருபக்க மெல்லா விடங்களிலு முள்ள தென்க. (வி - ம்.) வார்தல் - நெடுமை. "வார்தல் போகல் ஒழுகன் மூன்று நேர்தலும் நெடுமையுஞ் செய்யும் பொருள" (தொல். சொல்.) |