பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்713

விழாக்களத்தில் யாவரும் மெய்ம்மலி யுவகைபொங்க இன்புற்றிருத்தல் போல வீரர்கள் யாவரும் இன்புற்றுப் போர் செய்தலின் போர்க்களம் விழாக்களம்புரைய என்றார். உளம் ஆண்மை, கேண்மை வழாக்கடுப்பொடு துரப்பவெனக் கூட்டுக. குழாக்களிறு : விகாரம். 'தழா : செய்யா' என்னும் வாய்பாட்டு வினையெச்சம். வட்டம், பரிசைப்படை.

(200)

 நீக்க மின்றென வழுந்து றத்தழுவி நீணி லம்விழுந ரோர்புறம்
 தேக்கு நீர்ப்பெயலின் மொக்கு ணேரடி விசைப்பி னிற்சிதர்ந ரோர்புறம்
 தாக்கி ருந்தகரி னான னம்பிதிர்த ழைப்ப முட்டுநர்க ளோர்புறம்
 ஓக்கு முட்டியினு டற்றி வன்கொடிறு டைப்ப வீழுநர்க ளோர்புறம்.

(இ - ள்.) போர்க்களத்தில் கண்டோர் இடைவெளியின்றென்று சொல்லும்படி மெய்யழுந்தும்படி ஒருவரை யொருவர் தழுவிப் பெரிய நிலத்தின் கண் வீழ்கின்றவ ரொருபக்கலிலுளர். நீர்நிறைதற் கேதுவாகிய மழைபெய்கின்ற காலத்துளவாகும் புற்புதத்தை யொப்பக்கால் விசையினால் சிதர்கின்றவர் ஒருபக்கலிலுளர். ஒன்றினோடொன்று தாக்குகின்ற ஆட்டுக்கிடாக்கள்போல முகம் தூளியுளவாம்படி முட்டுகின்றவர்க ளொருபக்கலுளர். ஓச்சிய கைமுடக்கினால் வருத்தி வலிய கபோலங்களை உடைக்க நிலத்தின் விழுகின்றவ ரொருபக்கலிலுளர்.

(வி - ம்.) பிதிர் - தூள். ஓக்குதல் - ஓச்சுதல். முஷ்டி என்ற வடசொல் முட்டியெனத் திரிந்து நின்றது. அஃதாவது கைவிரல்களைக் குவித்து மடக்கல். கொடிறு - கதுப்பு.

(201)

 கட்டு கையினொடு காற டுக்குநர்க ளோர்பு றங்கதழ் புகட்டினர்
 ஒட்டி நிற்குநர்க ளோர்பு றங்கருதி யுய்த்த வெம்படை யுலப்புற
 விட்ட ழிக்குநர்க ளோர்பு றந்திகிரி வீழ வெள்வளையும் வீசுபு
 பட்டு நின்றவுட லெஃகு கண்டனர்ப றித்து நக்கெதிர்ந ரோர்புறம்.