| (இ - ள்.) ஓருவரை ஒருவர் தழுவிய கையினோடு காலையிடறி வீழச் செய்கின்றன ரொருபக்கலுளர். விரைந்து ஒருவரையொருவர் கட்டி வஞ்சினங் கூறுகின்றவ ரொருபக்கலுளர், பகைவர் தம்மைக் கொல்லக் கருதிச் செலுத்திய வெவ்விய படைக்கலங்கெட அதனைச் செலுத்திச் கெடுக்கின்றவ ரொருபக்கலிலுள்ளார். சங்கரப்படை கீழே வீழ வெள்ளிய சங்கினையும் எறிந்து இறந்துநின்ற உடம்பின்கண்ணுள்ள வேலைக் கண்டு பறித்து நகுதலைச் செய்பவரொருபக்கலிலுள்ளார் என்க. (வி - ம்.) கதழ்பு - விரைந்து. திகிரி - சக்கரப்படை. வீசுபு - வீசி. எஃகு - வேல். | | மல்லி னாற்பிடிப டுத்தும் வார்சிலையி னெற்றி யும்மறல வூக்கியும் | | | செல்லே னக்கடிது ரப்பி யுங்கனலி சிந்து றத்திருகி நோக்கியும் | | | சொல்லி யும்புடைய கற்றி யுங்கயிறு துட்கெ னப்பெரிது வீசியும் | | | எல்லே யிற்றினுடல் பீறி யும்பொருந ரெல்லை யில்வர்க ளோர்புறம். |
(இ - ள்.) மற்றொழினானே பிடித்து நீண்ட வில்லானடித்துஞ் சுழலும்படி சுற்றிச் செலுத்தியும், மேகம்போல விரைவாக முழக்கம் செய்தும், தீச்சிந்த மாறுபாடுண்டாக நோக்கியும், நெடுமொழியும் வஞ்சினமுமாகிய இவற்றைக் கூறியும், தம்பக்கலில் அண்மினாரைச் சேய்மைக்கண்ணே நீக்கியும் அரிகயிற்றினை அச்சந் தோன்றும்படி மிக வீசியும், ஒளியோடு கூடிய பற்களால் உடலைக்கிழித்தும் அளவில்லாதவராய்ப் போர்செய்நர் ஒவ்வொரு பக்கலிலுள ரென்க. (வி - ம்.) 200ஆம் பாட்டு முதல் 204ஆம் பாட்டு வரையுள்ள நான்கு பாட்டும் தும்பைத்திணை. துறை : தானை யானை குதிரை யென்ற நோனாருட்கும் மூவகை நிலையில் தானை நிலையாகும். "குழாக்களிற்றரசர் குறித்தெ" கொலைக்களம், விழாக்களம்போல மெய்ம் மலியுவகைய, ராண்மையுள்ளம் கேண்மையிற்றுரத்தலின், அழுந்து படப் புல்லி விழுந்து களம்படுநரும், நீர்ப் பெயற் பிறந்த மொக்குள்போலத், தாக்கிய விசையிற் சிதர்ந்து நிலம் படுநரும், தகருந் தகரும் தாக்கிய தாக்கின் முகமுகஞ் சிதர முட்டுவோரும், முட்டியின் முறைமுறை குத்துவோரும், கட்டிய கையொடு காறட்குநரும், கிட்டினர் கையறத்தொட்டு நிற்குநரும், சுட்டிய படையை விட்டழிப்போரும் சக்கரம்போலச் சங்குவிட்டெறிநரும், சிலைப்புடை முரசிற்றலைப்புடைக்குநரும், மல்லிற் பிடித்தும் வில்லினெற்றியும், ஊக்கியும் உரப்பியும் நோக்கியும் நுவன்றும், போக்கியும்புழுங்கியும் நாக்கடைகவ்வியும், எயிறுடன் றிருகியும் கயிறுபல வீசியும், இனைய செய்தியின் முனை மயங்குநரும்," என்று நச்சினார்க்கினியர் தானை நிலைக்கு எடுத்துக் காட்டிய செய்யுளின் பொருள் இந்நான்கு செய்யுளி னமைந்திருத்தலும், "கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும்" என்னும் திருக்குறளின் பொருளமைந்திருந்தலுங் காண்க. (வி - ம்.) படுத்தல் - கொல்லுதல். எற்றுதல் - அடித்தல். செல் - மேகம். திருகுதல் - மாறுபடுதல். கயிறு - அரிகயிறு. இதனை வட நூலார் பாசமென்பர். (203) | | வேறு நீடமரின் மிண்டு தம்மிறைவி ழாது டற்றுநர்க ளோர்புறம் | | | தேறு மவ்வகையெ திர்த்து ளாரிருதி றத்த ருந்தபுத லோர்புறம் | | | பாற மால்களிறெ றிந்து டற்றுநர்க ளோர்பு றம்பகடு தாழவீழ்ந் | | | தீறு பட்டவரை யட்டு ளார்படைஞ ரேய்ந்து சூழமலை யோர்புறம். |
(இ - ள்.) வேறொரு போர்க்களத்தின்கண்ணே யுளவாம் மிகப் போரின்கண் முனைபோர் செய்யும் தானைத் தலைவர்கள் தந்தலைவர்கள் தோல்வியுறுதலைக் கண்ணுற்று அப்போரினின்றும் நீங்கித் தலைவர்கள் தோல்வியுறா வண்ணம் பகைவரை வருத்துபவர்களா யொருபுறமுள்ளன ரென்க. அங்ஙனம் தந்தலைவர்கள் தோல்வி யுறாமையைத் தெளிந்த இருதானைத் தலைவரு மிறத்தலொரு பக்கமுள்ள தென்க. மதமயக்கத்தையுடைய களிறுகளோட அடித்து வருத்துகின்றவர்க ளொருபுற மென்க. யானைகள் சாயக் கீழேவீழ்ந்து அழிந்தவரை அழிந்தவர் படை வீரர்கள் பொருந்திச் சுற்றுகின்ற ஆரவார மொருபுறமுள்ள தென்க. (வி - ம்.) இப்பாட்டின் முதலடி திணை; தும்பை; துறை வேன்மிகு வேந்தனை மொய்த்தவழி ஒருவன்றான் மீண்டெறிந்ததார் நிலை, 'தார்' என்பது முந்துற்றுப் பொரும்படையாதலின், இதனைத் தார்நிலை என்றார். |