பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்715

இரண்டாவதடி திணை : தும்பை, துறை : இருவர் தலைவர் தபுதி பக்கம். மூன்றாவதடி திணை தும்பை துறை : களிறெறிந்தோர்பாடு. ஈண்டுப் பாடு பெருமை. நான்காவதடி திணை : தும்பை துறை : களிற்றொடுபட்ட வேந்தனை அட்டவேந்தன் வாளோடு ஆடும் அமலை : அமலுதல் - நெருங்குதல். தொல். புறம் 7-ஆவது சூத்திரம் உரை பார்க்க.

(204)

 படைய றுத்துநனி பாழி கொள்ளுநர்க
           ளோர்பு றம்படைவ ழக்குமிக்
 குடைப டைக்கணுறு கூழை தாங்கெருமை
           யோர்பு றங்கணையும் வேலுமொய்த்
 தடுமு டம்புதிற னீங்க லின்றமர்த
           லோர்பு றந்தலைக ளற்றுயிர்
 விடுமு டம்புகளெ ழுந்து துள்ளுபுவி
           யப்ப வாடுவன வோர்புறம்.

(இ - ள்.) கையின்கண்ணுள்ள படையைப் போக்கி மெய்யாற் போர் செய்யும் மயக்கமுடையா ரொரு புறமுள ரென்க. பகைவர் படை வழங்குதன் மிகுதலானே ஆற்றாதுடைந்ததம் படைக்கண்ணே படைத்தலைவர் சென்று அங்ஙனம் கெடுத்த மாற்று வேந்தன் படைத் தலைவரை அவர் எதிர்கொண்டு நின்ற பின்னணியோடே தாங்கின கடாப்போலச் சிறக்கணித்து நிற்குநிலையினையுடையா ரொருபுறமுளரென்க. கணையும் வேலும் மொய்த்தலான் சென்ற வுயிரொடுகூடிய யாக்கை வன்மை நீங்கலின்றித் தங்குதலொரு புறமுளதென்க. தலைகளறுபட்டு உயிர் நீங்கிய யாக்கைகள் மேலெழுந்து துள்ளி யாவரும் வியக்கும் வண்ணம் ஆடுவன ஒருபுறமுள வென்க.

(வி - ம்.) திணை : தும்பை. முதலடிதுறை படையறுத்துப் பாழி கொள்ளுமேமம். இரண்டாவதடி துறை : உடைபடை யொருவன்புக்கு ஒருவன் கூழைதாங்கிய எருமை. கணையும் வேலும் துணையுற மொய்த்தலின் சென்ற வுயிரின்நின்ற யாக்கை. சென்ற வுயிரின் நின்ற யாக்கையாவது : சிறிதொழியத் தேய்ந்த உயிரானே துளங்காது நின்றவுடம்பு. இது கணையும் வேலும் நிலந்தீண்டாதவாறு செய்ய உடல் நிலைபெற்று நிற்றல். உயிர்விடு முடம்புக ளெழுந்து துள்ளுதல், இருநிலந்தீண்டா வருநிலைவகை, படைகளால் ஏறுண்ட தலையேயாயினும், உடம்பேயாயினும், நிலத்தைத் தீண்டா தெழுந்தாடுதல். இதனை அட்டையாட லெனவுங் கூறுவர். அட்டை அற்றுழியும் ஊருமாறுபோல தலையிற்ற காலத்தும் உடம் பாடுதலின் இப்பெயர் பெற்றது. பாழி - வலி. இஃதாகுபெயரா யுடம்பை யுணர்த்திற்று. ஏமம் - மயக்கம். அறுத்தல் - ஈண்டு இன்றாதல், இலக்கணை. வழக்கு - வழங்குதல். கூழை - பின்னணி. பின்னிரண்டடியும் திணைக்கெல்லாம் பொதுவன்மையிற் றிணை யெனவும் படாது. திணைக்கே சிறப்பிலக்கணை யாதலிற் றுறையெனவும் படாது. ஆதலால் தும்பைத் திணைக்குச் சிறப்பாய்த் துறைப்பொருள் நிகழ்ந்து கழிந்தபிற் கூறியதா மென்க. மெய்யாடு பறந்தலை யென்பர பதிற்றுப்பத்தாசிரியர். இதனை