| முன்னர்க் கூறினாம் ஆண்டுக் காண்க. இக்கருத்தினைக் கணையும்வேலும் துணையுற மொய்த்தலி னென்னும் தொல்காப்பியச் சூத்திரத்தானு முரையானு முணர்க. (205) | | இன்ன தானையிரு மாவு மேவியுமஃ தின்றி யுந்தமதி னத்தினை | | | மன்னர் போர்த்தலைவ ரேனை யோரினைம தக்க யங்கரிக டேரினை | | | வன்ன வண்டுரகம் வைய மால்கரியை வைய முந்தலை யடுத்துநின் | | | றொன்ன லார்தலைப னிப்ப வாடமரு ஞற்றி நின்றனவி டந்தொறும். |
(இ - ள்.) இத்தன்மைத்தாகிய தானையானது யானையும் குதிரையுமாகிய இருமாவின் மேலுள்ள வீரர்கள் பொருந்தியும். இவ்விரு மாவின்மேற் பொருந்தாத வீரர்கள் நிலத்தின்கண்ணின்றும் யானை வீரர் யானைவீரரோடும் இவுளி மறவர் இவுளி மறவரோடும் அரசர்கள் சேனைத்தலைவரையும், ஏனைய வீரரை யானைப்படையும், யானைகள் தேரினையும், பலநிறத்தையுடைய வளப்பமிக்க குதிரைகள் தேரினையும் மதமயக்கம் பொருந்திய யானைகளைத் தேரும் பலவகையாகப் பொருந்தி நின்று பகைவர் தலைநடுங்க இடங்கடோறும் வெற்றியினையுடைய போரைச்செய்து நின்றன வென்க. (வி - ம்.) அடுத்து என்னுஞ் சொல்லை ஏற்புழிக் கூட்டி முடிக்க. வன்னம் - நிறம். இஃது திணை : தும்பை, துறை, இனி யானை நிலைக்கும், குதிரை நிலைக்கும் துறைப்பகுதி. அஃது அரசர் மேலும், படைத் தலைவர் மேலும் ஏனையோர் மேலும் யானை சேறலும், களிற்றின் மேலும், தேரின்மேலும், குதிரை சேறலும் தன்மேலிருந்து பட்டோரை மோந்து நிற்றலும் பிறவுமாம். தொல். புறம் 72-ஆம் சூத்திர வுரை யானுணர்க. (206) | | மேக மூர்ந்துபுரு கூதர் தம்மின்விளை யாடு கின்றதென வேழமும் | | | மாகம் வாங்கலைக ளூர்ந்து காலிறைவர் மாறு கொண்டதென மாக்களும் | | | வேக வண்சிறைமு ளைத்த நீள்சிலைகண் மேல்கொ டச்சிலையின் மன்னவர் | | | ஓகை யாலெதிர்வ தென்ன வையமுமு டற்று வெஞ்சமர்கை மிக்கதே. |
(இ - ள்.) மேகங்களைச் செலுத்தி இந்திரரிருவர் தங்களுக்குள் விளையாடல் செய்வதை யேய்ப்ப யானையு மியானையும், வானின் கண்ணே வாவிச்செல்லும் கலைமானாகிய ஊர்தியைச் செலுத்திக் காற்றாகிய தலைவர்கள் பகைமை கொண்டதனை யொப்பக் குதிரையுங் குதிரையும், வளப்பமிக்க வேகத்தினையுடைய சிறைமுளைத்த நீண்ட மலைகள் மேலிருந்துகொண்டு அம்மலையின்கண்ணுள்ள இறைவர்கள் உவப்பாலொருவரோ டொருவர் எதிர்ப்பதை யொப்பத் தேரொடு தேருஞ் செய்கின்ற வெவ்விய போர் மிகுதியாக யாங்கணு முள்ளன வென்க. (வி - ம்.) திணை - தும்பை. துறை : 72-ஆவது சூத்திரத்தில் "நோனாருட்கும் மூவகை நிலையென்னாது வகையென்றதனால்........ இப்பகுதி யெல்லாம் கொள்க. இம்மூன்றுந் தாமே கொண்டு பொருவுழித் தானைமறம், யானைமறம், குதிரைமறம் என்றும் பெயர்பெறு மென்றலில் இது தானைமறம். தேர்தானே செல்லாமையான் அதற்கு மறமின்றென்று விலக்கினான். |