| புருகூதர் - இந்திரர். மாகம் - வான். கலைமான் - காற்றின் வாகனம். சிலை - மலை. ஓகை - உவகை. கைமிகுதல் - அதிகரித்தல். இப்பாட்டு திணை : தும்பை. துறை : யானைநிலை, குதிரைநிலை, 'தானை, யானை குதிரை யென்ற, நோனாருட்கும் மூவகை நிலை' என்ற தொல். புறம் 72-ஆம் சூத்திரத்தானு முரையானு முணர்க. (207) | | மேக்கு ளான்புடைபு குத்து மாறெனவெ | | | குண்டெ திர்ந்தவரு ரம்புகக் | | | கோக்கும் வல்லெயிறு யர்த்தும் வாருடல்கு | | | ழைக்கு மண்ணடியு ளர்த்தியிட் | | | டோக்கி நீள்கையுறு தண்டி னேரிரத | | | மூரு மாவினம்வி ளிக்கும்வால் | | | தாக்கி யும்படைய ழித்து லம்புவத | | | மாது நீழல்சுளி வேழமே. |
(இ - ள்.) தம்முடைய நிழலினை மதமயக்கத்தாற் பிறிதொரு யானையைக் கருதிச் சீற்றங்கொள்கின்ற யானைகள், தங்கள் மேலுள்ள பாகர்களிடத்துச் சேர்க்குந் தன்மைபோலச் சீற்றமுற்று எதிர்த்தவருடைய மார்பின்கண்ணே கோத்த கொம்பினை மேலேயுயர்த்தும்; நீண்ட வுடம்பினைக் குழைக்கும்; அடியால் மண்ணைத் தேய்த்து நீண்ட கையினிடத்துப் பொருந்திய தண்டைவீசி எதிர்த்த தேர்களை இழுத்துச் செல்லும்; குதிரைகளைக் கொல்லும்; வாலாற்றாக்கிப் படைகளை யழித்தும் முழங்கும் என்க. (வி - ம்.) வேழம் உயர்த்தும், குழைக்கும், விளிக்கும் உலம்புவ என வினை முடிபு செய்க. தம் + ஆது =தமாது: (208) | | கந்து கப்பெயர டுக்கு மென்னவொளிர் கந்து கப்பெயர்வி னொய்யெனச் | | | சிந்து ரத்தநுத லோடை யானைமணி சேர்ந்த மந்தகமி தித்திடும் | | | முந்து கிள்ளை யென லொத்த தென்னமுடு கிப்பறந்திரத மேலடி | | | தந்தி டுந்தலைவர் வாசி தீரவெதிர் தானை வாசிதகு வாசியே |
(இ - ள்.) எதிர்த்த தலைவர்கள் பெருமை நீங்க எதிர்த்த தானையைக் (கோறற்கு) பெருமை தக்கிருக்கின்ற குதிரைகள் கந்துகமென்னும் பெயர் தங்களுக்குப் பொருந்துமென்று கண்டோர் கழறப் பந்து புடை பெயர்தல்போல விரைவாகச் சிந்துரத்தினை யணி நெற்றியின்கண் முகபடாத்தினையுடைய யானையின் முத்தம் பொருந்திய தலையின்கண் மிதிக்கும். வாவிச் செல்லுதலின் யாரும் முதன்மையாகச் சொல்கின்ற கிள்ளையென்னும் பெயர் இக்குதிரைக்கு ஒத்ததாகுமென்று கண்டோர் சொல்ல விரைந்து பறந்து தேர்க்காலின்மீது கால்களை வைக்குமென்க. (வி - ம்.) வாசி - பெருமை, குதிரை. கந்துகம் - குதிரை, பந்து. கிள்ளை - கிளி, குதிரை. முன்னைய இரண்டு வாசிகளும் பெருமை, |