| பின்னையவாசி குதிரை. முன்னைய கந்துகம் குதிரை. பின்னையது பந்து, கிள்ளை முன்னையது கிளி. பின்னையது குதிரை. (209) | | இரத மென்றபெய ரேற்கு மென்னவெழி லார்ப டைச்சுவைகொ ழித்தெழ | | | விரவு தானைபல பாகு செய்துவிறல் வாசி யைத்துவைய லாக்குபு | | | கரம தக்களிறு கூறு செய்துகரு னைக்கு வால்பலநி றுத்துவிண் | | | பரவு தேர்த்தொகுதி வல்சி செய்வபடர் சூறை போன்றுதிரி வையமே. |
(இ - ள்.) யாங்கணும் பரந்து செல்கின்ற சுழல்காற்றுப் போன்று செங்களமெங்கணுந் திரிகின்ற தேர்கள் இரதமென்று கண்டோர் சொல்லும் பெயர் இத்தேர்களுக்குப் பொருந்துமென்னும்படி அழகினையார்ந்த படைக்கலங்களாகிய சுவை கொழித்தெழாநிற்க, பலவாகக் கலக்கின்ற தானையைக் குழம்பாகச் செய்து விறலினையுடைய குதிரைகளைத் துவையலாகச் செய்து, கையையுடைய மதத்தோடு கூடிய யானையைக் கூறிட்டுப் பலபொரிக் கறிகளாக்கி நிலவச்செய்து வானின்கட் பரவிச் செல்கின்ற பகைவர் தேர்க்கூட்டத்தினை உணவாகச் செய்வன வென்க. (வி - ம்.) இரதம் - தேர், இரசம், சுவை. பாகு - குழம்பு. இதனை "பாகு பால் குழம்பு பாக்காம்......" என்னும் நிகண்டா னறிக. கருனை - பொரிக்கறி. வல்சி - உணவு. வையம் - தேர். (210) | | வெளில்பி ணித்ததொட ரென்ன வீரர்குடர் சுற்று காலின்விரை குஞ்சரம் | | | ஒளிமி குத்தவரு ரத்த ழுத்துலவை வயிர்பொ ரத்துணிய வாலிகால் | | | அளிமி குத்தமுகி லொத்த சிந்துமணி யாற்பு யத்தவிறு கோட்டிணைக் | | | களிமு லைச்சுவடு பூத்த மார்பிறைக டுத்து ளார்களிறெ திர்த்துளார். |
(இ - ள்.) கட்டுத் தறியாற் பிணித்த சங்கிலியென்னக் கண்டோர் சொல்லும்படி எதிர்ந்த வீரர்கள் குடர்சுற்றிய காலொடு விரைந்து செல்கின்ற யானைகள் ஒளிமிக்க அவ்வீரர்கள் மார்பிற் குத்திய கொம்புகள் ஊதுகொம்பை யொப்ப ஒடிய அவ்வொடிந்த கொம்பிணைகளால் களிப்பைத் தருகின்ற முலைத்தழும்பால் பொலிவுற்ற மார்பினையுடைய இறைவனை நிகர்த்தா ரென்க. (வி - ம்.) இஃது பண்புந் தொழிலும்பற்றிச் சினையுமுதலும் பற்றிவந்த உவமம். வெளில் - கட்டுத்தறி. தொடர் - சங்கிலி. உலவை - கொம்பு. வயிர் - ஊதுகொம்பு. புய்த்தல் - பிடுங்குதல். இதுதிணை : தும்பை. துறை - களிறெதிர்பாடு. பாடு - பெருமை. களிறெதிர்ந் தான் பெருமை கூறலின் யானை நிலையுளடங்காதாயிற்று. (211) | | நெடுமொ ழித்திறமும் வஞ்சி னங்களுநி கழ்த்த லோடுதலை யற்றுமண் | | | படுவ வாடிகிரி சுற்ற லோடுவளர் பாணி யற்றுகுவ சாரிகை | | | அடைவி னாடுவம ருங்கு லற்றுடலம் வீழ்ந்த தாளடிக ளற்றுவீழ் | | | உடலம் வாயிதழ்ம டித்து வாலெயிற ழுந்த வூன்றுவன வெங்கணும். |
(இ - ள்.) போர்நிகழும் எல்லாவிடங்களிலும் தம் மேம்பாட்டுரைகளையும், சூளுரைகளையும் நிகழ்த்தலுடனே தலைகளறுபட்டுக் |