| கீழே பொருந்துவன, வாட்படையையும், ஆழியினையும் சுற்றுதலுடனே வளர்கின்ற கைகளறுபட்டுக்கீழே சிந்துவன. இடையறுபட்டு வீழ்ந்த உடல் சாரிகைத் தொழிலை அம்முறைப்படி யாடுவன. காலின்கணுள்ள அடிகளற்றுக் கீழே வீழ்ந்த உடல் வாயின்கணுள்ள இதழினை மடித்து வெள்ளிய பற்கள் அவற்றிலழுந்தும்படி அழுத்துவன வென்க. (வி - ம்.) இப்பாட்டு முதலடி திணை : தும்பை. துறை : ஒருவரொருவர் நிலைகூறல். இதனைத் தொல். புறம் 72ஆம் சூத்திரவுரையிற் காண்க. சாரிகை - மண்டிலம். வால் - வெண்மை. (212) | | ஒருவ னுக்குரிமை பூண்ட பார்மகளு ரந்த ழாமைநல னென்பபோல் | | | உருவி நின்றகணை வேல்க டாங்கமணு றாது றங்குமுட லெண்ணில | | | பொருத நின்றவர்க ளென்றெ திர்ந்தெதிர்பொ ராமையாற்சிலர் சமழ்ப்புற | | | மருவு மண்டிலவ கைக்க ணின்றபடி நின்ற மாண்டவுட லெண்ணில. |
(இ - ள்.) திருமாலாகிய ஓராடவனுக்குக் கற்புரிமை பூண்டவளாகிய நிலமகள் மார்பினைத் தழுவாதிருத்தல் நிறையுடையாராகிய நமக்கு இன்ப மென்பார்போல மார்பின்கண்ணே பட்டுவெரிந் போந்தகணையும் வேலும்தாங்க இருநிலந் தீண்டாது பேருறக்கங்கொண்ட வுடலங்கள் அளவில்லன. அங்ஙனம் நின்றநிலையிற் பெரும் பிறிதுற்றவர்களைப் போர்செய்ய நின்றவர்களென்று எதிர்ந்த சில வீரர்கள் அங்ஙனம் பேருறக்கங் கொண்டவர் போர் செய்யாமையால் நாணமடையாநிற்க, மண்டில வகையின்படி மாண்டு நிலைபெற்ற உடலம் எண்ணிலவென்க. (வி - ம்.) மண்டில வகையாவன : ஆலிடம், பிரத்தியாலீடம், பைசாசம், மண்டிலம் என்ப. சமழ்ப்பு - நாணம். திணை - தும்பை. துறை - ஒருவரொருநிலை கூறல் சென்ற வுயிரின்நின்ற யாக்கை இரு நிலந் தீண்டாமை கண்டு போர்க்கெதிர்ந்துளா ரெனல் போர்வீரர் எதிர்ப்போர் செய்யாமைகண்டு நாணலின் "பொராமையாற் சிலர் சமழ்ப்புற" என்றார். (213) | | இத்தி றத்தமர்வி ளைந்த காலையெறுழ் மிக்க பூதரினு டைந்தன | | | தொத்த ழற்கணவு ணக்கு லந்தொலைவி லாத வாற்றலன லன்முனைஇப் | | | பைத்த பூதருலை யச்சி லைத்தொழில்ப யிற்றி னான்படைபு ரத்தறோள் | | | வைத்த சிங்கனொரு தண்டி னீளிரத வாம்ப ரித்திரள்கள் சாடுபு. |
(இ - ள்.) இவ்வகையாகப் போர்நிகழ்ந்த காலத்து வலிமிக்க பூதர்களாற் கூட்டமாக அழலைச் சிந்துகின்ற கண்களையுடைய அவுணக் கூட்டம் வெந்நிட்டோடின. கெடுதலில்லாத வலியினையுடைய அனலனென்னும் தானைத்தலைவன் முனைந்து போர்க்கள மெங்கணும் பரவிய பூதர்கள் வருந்தும்வண்ணம் விற்றொழிலைச் செய்தனன். சேனைகாத்தற் றொழிலைத் தன் தோளிற்றாங்கிய சிங்கனென்பவன் ஒரு தண்டத்தால் நீண்டதேர் வாவும் குதிரைக் கூட்டங்களையடித்து. (வி - ம்.) 'இன்' ஐந்தாவது ஏதுப்பொருட்டு. பைத்த - பரத்தல். படைபுரத்தல் தோள்வைத்த சிங்கன் - தானைத்தலைவன். (214) |