| | மெய்யெ லாங்கணைகு ளிப்ப வையம்விரை | | | வுற்றி வர்ந்துவில்ப றித்தொரீஇ | | | ஐயெ னத்தலைபு டைத்த தண்டுறும | | | வன்கை பற்றியுர மங்கையால் | | | நைய வெற்றியுய ரத்தி ரித்துயிர்ந | | | டப்ப மண்டலைய றைந்தனன் | | | வெய்ய சண்டனினி யுய்தி யேயெனவெ | | | குண்டெ திர்ப்பவெதிர் மேயினான். |
(இ - ள்.) தன்னுடல மெங்கணும் அம்புகள் மூழ்க அனலன் தேரின்கண் விரைவுற்றேறி அவன் கையின்கண்ணுள்ள வில்லினைப் பறித்து வீசி விரைவாக அனலன் தன் தலையின்கண் ணடித்த தண்டம் பொருந்திய கைகளைப் பிடித்து மார்பை அகங்கையால் வருந்தும்படி அடித்து உயர்த்துச்சுற்றி உயிர்செல்ல நிலத்தின்கண் டலையை மோதினான். கொடிய சண்டனென்பான் இனி பிழைக்கக் கடவாயா வென்று சீற்றங்கொண் டெதிர்க்க அவனெதிரே சென்றன னென்க. (வி - ம்.) ஐ : விரைவுக் குறிப்பு. (215) | | சண்டன் சண்டனக ரெய்து கென்னவொரு | | | தண்ட முய்த்தனன வன்கரம் | | | கொண்ட தண்டமெதி ருய்த்த னன்பொறிகு | | | லைந்து ளாரிருவ ருஞ்சினைஇ | | | மண்டு மாயனய ரக்க ணத்தலைவ | | | னீலன் வார்கதைவ ழங்கினான் | | | உண்டி யாவியென மாயன் முத்தலைய | | | சூல நீலனுர முய்த்தனன். |
(இ - ள்.) சண்டனே! நீ இயமனுலகஞ் செல்வாயாக வென்று ஒரு தண்டினைச் செலுத்தினான். அச்சண்டன் தன் கையின்கட்கொண்ட தண்டினைச் செலுத்தினான். போரான் அறிவு கலக்கமுற்றார்கள். இருவரும் இதனைக் கண்டு சீற்றமுறீஇப் பொருந்திய மாயனென்பவன் சோர்வடையப் பூதகணத் தலைவனாகிய நீலனென்பான் தண்டத்தைச் செலுத்தினான். மாயனென்பான் இவன் அவியை உண்ணுவாயாக வென்று முத்தலைய சூலமொன்றினை நீலனென்பான் மார்பின்கட் செலுத்தினா னென்க. (வி - ம்.) சண்டன் - இயமன். இதனைச் "சண்டன் கூற்றலி வெய்யோனாம்" என்னும் நிகண்டா னறிக. (216) | | உயங்கி நீலனவன் வார்மி டற்றெயிறு றுத்தி ரத்தமுயி ருண்டனன் | | | மயங்கு சிங்கனொடு சண்ட னுந்தெளிபு வார்ந்த தண்டமொடு நேர்ந்தனர் |
|