கொள்க. துவர - முற்ற. "துவரத் துறவாமை" என்றவிடத்து இப்பொருட்டாதலை யறிக. வை - வைக்கோல். பதடி - பதர். தணத்தல் - நீக்கல். கூடு - நெற்கூடு, குதிர் முதலியன. உறுத்தல் - தங்கச் செய்தல். இது தற்குறிப்பேற்றவணி. | | வித்துணக்க லொருபாலாம் வெறுத்தவரி சனமிஞ்சித் | | | தொத்தெடுப்ப தொருபாலாஞ் சுவைக்கரும்பு தடிந்தாலை | | | வைத்தடுவ தொருபாலாம் வார்கமுகா தியிற்குலைத்த | | | கொத்திறுப்ப தொருபாலாங் குளிர்பணைத்தண் ணடைகடொறும். |
(இ - ள்.) குளிர்ச்சி பொருந்திய வயல்களையுடைய மருதநிலத்தூர்கடொறும் விதைநெற்களை யுலர்த்தல் ஒரு பகுதியினாம் (ஒன்றினோடொன்று) செறிந்த மஞ்சளும் இஞ்சியுமாகிய இவற்றின் கொத்துக்களை யெடுத்தல் ஒரு பகுதியினாம். இனிய சுவையையுடைய கரும்பை வெட்டி இயந்திரங்களில் வைத்து (நெரித்துச் சாறுண்டாக்கி யதனைக்) காய்ச்சுவதொரு பகுதியினாம். நீண்ட கமுகு முதலிய (புறக்காழுடையவற்றிற்) குலைசெய்த (காய்க்) கொத்துக்களை அறுப்பதொரு பகுதியினாம். (வி - ம்.) வெறுத்த - செறிந்த. "விறப்பும் வெறுப்பும் உறப்புஞ் செறிவே" என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்தானறிக. அரிசனம் - மஞ்சள். தொத்து - கொத்து. ஆலை - இயந்திரம். குலைத்த - குலைசெய்த. இறுப்பது - அறுப்பது. தண்ணடை - மருதஞ்சாரூர். "தண்ணடை மருதஞ்சாரூர்" என்னும் நிகண்டானறிக. (132) | | மங்கலத்தின் பெருமகிழ்வும் வருபுனலாட் டயர்வியப்பும் | | | கொங்குயிர்த்த மலர்ச்சோலைக் குலாய்நுகருந் தனிநயப்பும் | | | திங்கடொறுந் தேவகுலச் சிறப்பெடுக்கு மிகுகளிப்பும் | | | பொங்குவன வூர்கடொறும் பொலிதருமாந் தருக்கெல்லாம். |
(இ - ள்.) அம்மருத நிலத்தூர்கடோறும் மக்களுக்கெல்லாம் மங்கலங் காரணமாக உளவாகிய பெரிய மகிழ்ச்சியும், ஓடுகின்ற புனலாட்டைப் பரத்தையரோடு புறநகரின்கட் சென்று செய்கின்றதனா லுளவாகிய இறும்பூதும், வாசனையை வெளியிடுகின்ற மலர்களையுடைய சோலைக்கட் பொருந்தி யின்பம் நுகருதல் காரணமாக உளவாகிய விருப்பமும், மாதங்கடோறும் தேவாலயங்களில் விழா எடுத்தலா லுளவாகிய மிக்க களிப்பும் பொலிவன. (வி - ம்.) மங்கலம் - மணம். புனலாட்டு - பரத்தையரோடு புற நகரின்கட் சென்று புனலாடல். கொங்கு - வாசனை. குலாய் - பொருந்தி. நயப்பு - விருப்பம். திங்கள் - மாதம். தேவகுலம் - தேவாலயம். சிறப்பு - விழா. "சிறப்பொடு பூசனை" என்னுமிடத்து இப்பொருட்டாதலை யறிக. சோலைக்குலாய் நுகர்தல் - பொழினுகர்தல். (133) | | பரத்தைமையாற் கணவருடன் பாவையர்கள் புலந்தொழிக்கும் | | | வரத்தகலா மலதேனைக் கலாம்வருவ தறியாதங் |
|