பக்கம் எண் :

திருநாட்டுப் படலம்73

 கிரக்கலுறு வார்க்களித்து மிடருழப்பார்க் கிடர்துமித்தும்
 புரக்கவிரங் குவதன்றிப் புகாதுயங்கி யிரங்குவதே.

(இ - ள்.) அவ்வூர்கள், பரத்தமை ஏதுவாக நாயகருடன் பதுமையை யொத்த தலைவியர்கள், புலவியுற்று நீக்கும் மேன்மை பொருந்திய சிறுகலாம் அல்லாது, ஏனைய கலகங்கள் தோன்றலை யறியாதாம். இரக்கத் தொடங்கினவர்க்கு (அவர் வேண்டிய பொருளைக்) கொடுத்தும் துன்பத்தினை யனுபவிப்பவர்களுக்கு அத்துன்பத்தினைக் கெடுத்தும் காத்தற்கிரங்குவதன்றி வருந்தி யிரங்குவது அம்மருதநிலத்தூர்களிற் புகாது.

(வி - ம்.) பரத்தமை - அயன்மை; அயலாரிடத்துஞ் செல்லுந் தன்மை. "பண்பில் காதலன் பரத்தமை நோனாது" என மணிமேகலையிலும் வந்திருத்தல் காண்க. புலந்து - புலவிகொண்டு. சிறு கலாம் - பரத்தமையிற் பிரிந்தமை. பின்னரின்பம் விளைவிக்குமாதலால் 'கலா மென்னாது' வரத்தகலாம் என்றார். அங்கு - அம்மருதநிலத்தூர்களில். துமித்தும் - கெடுத்தும்.

(134)

 தணந்துபரத் தையர்மாட்டுச் சார்காலு மூடலினும்
 உணர்ந்துணர்த்தும் பாணியினு முலவாமை யெழுநினைவு
 புணர்ந்ததன தியறெரித்தாற் போலமதன் கணையாகி
 மணங்கமழ்பங் கயமலர்கண் மரீஇத்திகழுந் திணைமருதம்.

(இ - ள்.) தலைவியர்களை நீக்கிப் பரத்தையரிடத்துப் பொருந்துகின்ற காலத்தும், ஊடலினும், (அங்ஙனம் நிகழ்ந்த ஊடலை) யறிந்து தீர்க்கின்ற காலத்தும், கெடாமலெழுகின்ற நினைவைப் பொருந்திய தனதிலக்கணத்தைப் பிறர்க்குத் தெரிவித்தாற்போல மன்மதனுடைய அம்பாகி வாசனை பரிமளிக்கின்ற தாமரை மலர்கள் பொருந்தப்பெற்று விளங்கும் மருதத்திணை.

(வி - ம்.) ஊடலும் ஊடல்நிமித்தமும் மருதத்திற்கு உரிப்பொருளாதலின் நீங்குகின்ற காலத்தும், ஊடலைத் தீர்க்கின்ற காலத்தும் நினைவையுண்டாக்கு கின்ற தன் தன்மையைப் பிறர்க்கறிவித்ததுபோல மன்மதன் கணையாகிய தாமரைப்பூக்களை யுடையது மருதநிலமென்க. தாமரை மலர் மதன் கணையாதலை "நினைக்குமரவிந்தம்" என்பதனாலுணர்க. உணர்ந்துணர்த்தும்பாணி - ஊடலைத் தீர்க்கின்ற காலம்.

(135)

நெய்தல்

வேறு

 விருப்பின் மீன்கவர் வினைஞர் கோட்சுறா
 மறுப்பி னாடலும் வருதன் மாண்புணர்ந்
 தொருப்பட் டீர்ம்புன லும்பற் போற்றித்தம்
 கருத்து வாய்ப்பது கருங்க டற்புரம்.

(இ - ள்.) விருப்பத்தினால் மீனை (வலையெறிந்து) கவர்கின்ற பரதர்கள் வலியினையுடைய சுறா மீனின் கொம்பினை நட்டு (நினைத்து) நாடாநிற்க (அவன் ஆண்டு) எழுந்தருளும் மாட்சியைக் கண்கூடாக அறிந்து (அந்த நெய்தல்நில மக்கள் யாவரும்) ஒற்றுமைப்பட்டு, கடற்