பக்கம் எண் :

74தணிகைப் புராணம்

கிறையாகிய அவ்வருணனைப் போற்றுதல் செய்து தங்களெண்ணங்களெல்லாம் வாய்க்கப்பெறுவது நெய்தல் நிலம்.

(வி - ம்.) சுறா மருப்பில் வருணனை நிறுவிநாடாநிற்க அவன் வரும் மாட்சியை யறிந்து தங்களெண்ணங்கள் வாய்க்கப்பெறுவது. நெய்தனிலமெனக் கூட்டுக. கோள் - வலி; சுறாமருப்பின் நாடல் - சுறாவின் கொம்பை நட்டு வருணனை யதில் நிலவச்செய்து வழிபடல். இதனை, "சுறவமுண்மருப் பணங்கயர்வன கழிச்சூழல்" என்னும் பெரிய புராணச் செய்யுளானறிக. கடற்புறம் - கடலிடம். கருத்து - கருதப்படும் பொருள்களை யுணர்த்தலின் ஆகுபெயர்; உம்பன் - தேவன். 'ஓங்குவாவுடையும்பன்' எனும் பிரபுலிங்க லீலையடியா னுணர்க.

(136)

 கிழக்கு மேற்கெனக் கெழுமச் செப்பலாற்
 கிழக்கு மாதிரக் கிழவன் பண்ணைசூழ்
 முழக்கு நீர்க்கடன் முதல்வ னானது
 வழக்கு மேற்றிசை வருணற் கென்பவே.

(இ - ள்.) (உலகத்தொருவன் கிழக்கெனக் கருதிக் கூறிய அக்) கீழ்த்திசையே (அவனுக்குக் கிழக்கிலுள்ளானொருவன் அதனை) மேற்குத் திசையெனக் காண்டலளவைக்குப் பொருந்தக் கூறலான், கிழக்குத் திசையினுக்குரியவனாகிய இந்திரன் வாழுகின்ற மருத நிலத்தாற் சூழப் பட்ட முழக்கத்தைச் செய்கின்ற நீர் நிறைந்த கடலுக்குத் தலைவனாயது மேற்றிசைக் கிறைவனாகிய வருணனுக்கு வழக்காறாகும் என்று சொல்வார்கள் அறிந்தோர்கள்.

(வி - ம்.) கிழக்கையே மேற்கென இயைபுறக் கூறலால் கீழ்த்திசைக் கடலுக்கு மேற்றிசை வருணன் நாயகனானது முறையாமென்க. திக்குக்கள் நித்தமாய் வியாபகமாய் இருப்பினும் உபாதிவயத்தான் கிழக்கு மேற்கு முதலியவாகப் பாகுபாடு செய்யப்படுதலின் இஃதே கிழக்கென ஒருவராலும் வரையறை செய்ய இயலாதென்பார் "கிழக்கு மேற்கெனக் கெழுமச் செப்பலான்" என்றார். இனி யொருசாரார் கிழக்கு மேற்கென இயைபுறக் கூறலால் கீழ்த்திசைக் கடலுக்கு நாயகனானது வருணற்கு முறையாமென்பர்.

கிழக்கு இரண்டாவதன்றொகை. மாதிரம் - திசை. கிழவன் - ஈண்டு இந்திரன். பண்ணை - ஈண்டு மருதநிலம். வழக்கு - முறை. கடல் -
நான்காவதன்றொகை.

(137)

 புரையில் புன்னைகள் பூசை நீர்க்கடல்
 அரையற் காற்றுவா னமைத்தல் போன்மெனத்
 திரையொ துக்கிய தெய்வச் சங்கினுள்
 விரைம துப்புனல் வீயு குப்பன.

(இ - ள்.) (அந்நெய்தனிலத்து) குற்றமில்லாத (நெய்தனிலக் கருப்பொருளாகிய) புன்னை மரங்கள் பூசனையை நீரையுடைய கடலாகிய வரையனுக்குச் செய்யும்பொருட்டு அமைத்திருத்தல்போலுமென்று சொல்லும் வண்ணம் அலைகள் கரையோரங்களிலொதுக்கிய தெய்வத்