தன்மைபொருந்திய சங்கினிடத்து வாசனையோடு கூடிய தேனாகிய நீரையும் பூவையும் கொட்டுவன. (வி - ம்.) கடலரையன் - கடலாகிய அரையன். இனி ஒருசாரார் வருணனென்பர். மதுப்புனல் - தேனாகிய நீர். வீ - மலர். இது தற்குறிப்பேற்றவணி (138) | | பொய்ம்மை யண்ணல்பாற் புகன்ற தீங்கெலாம் | | | மைம்ம ணிக்கடல் வைக லும்படிந் | | | தம்ம நீக்குமா றடுத்த போன்றன | | | விம்மு தேமலர் விறந்த முண்டகம். |
(இ - ள்.) நறுமணம் நிறைந்த மலர்கள் செறிந்த தாழை மரங்கள் பெருமை பொருந்திய சிவபெருமான் பக்கலில் (முன்னர்) முடி கண்டேனென்று கூறிய பொய்யானுளவாகிய குற்றங்களை யெல்லாம் நீலமணி போலும் நிறத்தினையுடைய கடலின்கண் நாடோறும் மூழ்கி (அக்குற்றங்களையெல்லாம்) நீக்கும்வண்ணம் அடுத்தன போன்றன. (வி - ம்.) பொய்ம்மை - பொய்; அண்ணல் - ஈண்டுச் சிவபெருமான்; தீங்கு - தீங்கு பயத்தற்கேதுவாய குற்றங்கள். மைம்மணி நீல - மணி. அம்ம - இடைச்சொல். விறந்த - செறிந்த. முண்டகம் - தாழை. இதனை "முண்டகம் தாழை கள்ளு முளரி" என்னும் நிகண்டானறிக. இது மேலையணி. (139) | | தடித்தெ ழுந்தொறுந் தாழை பூப்பன | | | அடுத்த தண்கட லண்மி நீர்முகில் | | | எடுத்த செல்வமற் றிஃதெ னாவுளம் | | | மடுத்த காதலின் மகிழ்ச்சி கொண்டென. |
(இ - ள்.) தாழைமரங்கள் அண்மியிருக்கின்ற குளிர்ச்சிபொருந்திய கடலைப் பொருந்தி நீரையுட்கொள்ளு மேகங்கள் நீரோடு கைக்கொண்ட செல்வம் இஃதாமென்று உள்ளத்தின்கணிறைந்த அன்பினால் மகிழ்ச்சி கொண்டாற்போல மின்னலுண்டாகுந்தோறும் பூத்தலைச் செய்வன. (வி - ம்.) தடித்து - மின்னல்; மின்னலைக் கண்டவுடன் தாழை பூப்பதியல்பு; இதனை, "மின்பொ ருட்டினாற் கேதகை மலர்ந்திடும் விளங்கும், என்பொ ருட்டினால் மாமழை சொரிந்திடு மீட்டும், பொன்பொ ருட்டினால் யாவுமுண் டாமது போல, உன்பொ ருட்டினாலவுணர்க்கு மேன்மைய துளதாம்" (மாயைப் - 7) என்னும் கந்தபுராணச் செய்யுளானறிக. செல்வமென்றது மின்னை. தாம் அண்ணிய விடத்திலுள்ள செல்வத்தைப் பிறர் கொள்ள உவத்தல் மேலோர்க் கியல்பாகலின் அதுபோல மேகங்கள் கடலையண்மி நீரோடு கொண்டு சென்ற செல்வமிஃதாமென எண்ணி மின்னலைக் கண்டவுடன் தாழைகள் பூத்தல் மகிழ்தலை யொத்திருந்தன என்க. கொண்டென - கொண்டாற்போல. தாழையாகிய தாமடுத்திருக்கும்படியான கடல். நீரை முகத்தலானிம் மின்னலுளதாய தென்க. (140) |