| | வருபக ழிகள்பற்றி மதுவெறிந் தனனவுணன் | | | பொருபடை வகையெல்லாம் பொள்ளென மிசையுய்த்தான் | | | விரைசெல லவனிரதம் வேலையில் விழவோச்ச | | | உருமென நிலன்குப்புற் றுடற்றுமற் றொழிலேற்றான். |
(இ - ள்.) தன்னை நோக்கி வருகின்ற பகழிகளைப்பற்றி மது வென்பவன் ஒடித்தான். அசமுகன் போர்க்குரிய படைக்கலங்களை யெல்லாம் விரைவாக மதுவென்பான்மேற் செலுத்தினான். அசமுகனது விரைந்த செலவினையுடைய தேரைக் கடலின்கண் விழ மதுவென்பவன் எடுத்து எறிய அசமுகன் இடியினைப்போல நிலத்தின்கட் குதித்து உடனே மற்போரினை மேற்கொண்டா னென்க. (வி - ம்.) பொள்ளென : விரைவுக் குறிப்பு. வேலை - கடல். குப்புற்று - குதித்து. (220) | | அடிகொடு மதுவுந்த வந்தர நிமிர்ந்துக்காங் | | | கிடியென வுரமெற்றி யிம்மென மறைந்தரிதந் | | | திடுதிகி ரியைவிட்டா னெய்திய படையின்னான் | | | படையில னெனமீண்டு பரிவுசெய் திடமாண்டான். |
(இ - ள்.) அடியால் மதுவென்பவன் தள்ள அசமுகன் வானின் கண்ணெழுந்து கீழிறங்கி அப்பொழுதே இடியைப்போல மதுவென்பவன் உரத்தின்கண்ணே அடித்து விரைவாக மறைந்துநின்று திருமாலருளிய ஆழிப்படையை விட்டனன். அங்ஙன மெய்திய ஆழிப்படை இம் மதுவென்பவன் படைக்கல மில்லானென்று கருதிப்போய் அசமுகனுக்குத் துன்பினை யளிக்க அவன் மாண்டா னென்க. (வி - ம்.) திருமால் பக்கலின் வரங்கிடந்து ஆழிப்படையினை அசமுகன் பெறுஞான்று திருமால் படைக்கல மில்லான்மேற் செலுத்தின் அவ்வாழிப்படை நின்னையே கோறல் செய்யுமென அருளினான் ஆகலின், "படையில னெனமீண்டு பரிவுசெய்திட மாண்டான்" என்றார். நிமிர்ந்து - உயர்ந்து. உக்கு - கீழிழிந்து. இன்னான் - மதுவென்பவன். 214ஆம் பாட்டு முதல் இவ்விருநூற்று ஒருபத்தாறாம் பாட்டுவரை திணை தும்பை. துறை "தானை மறஞ்சிறப்பப் பொருது வீழ்தல்" தொல். பொருள். புறம் 72 ஆம் சூத்திரமுறை பார்க்க. (221) | | தானவர் படைகாவற் றலைவர்க ளொருங்கெய்தி | | | மானவெம் போராட மறந்தணிந் தனர்பூதர் | | | ஆனறிந் தெறுழிலக்க ரவரினு ளொருவீரன் | | | கானழ லுணநேர்ந்த காட்சியி னெதிர்சென்றான். |
(இ - ள்.) அவுணர் படையினைக் காக்கும் படைத்தலைவர்களொருசேரப் பொருந்திப் பொருந்திய போரினைச் செய்யப் பூதர்கள் வீரங் குறைந்தவரானார். அவ்விடத்து நிகழ்ந்ததனை யறிந்த வலியினையுடைய |