பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்723

இலக்கரின் வைத்து ஒருவீரன் காட்டை அழலுண்ண நேர்ந்த தோற்றத்தினைப்போல் எதிரே சென்றா னென்க.

(வி - ம்.) ஒருவீரன் தண்டகன். ஆன் - அவ்விடம். காட்சி - தோற்றம்.

(222)

வேறு

 தண்ட கப்பெய ரன்னவன் வார்சிலை தலைவணக் கினன்வல்லே
 மண்டு தீக்கணை சிதறின னொருமுறை வயக்களஞ் சூழ்தந்தான்
 கொண்ட துஞ்சிலை தொடுத்தது மறிகிலர் குறையுட லெழுந்தாட்டும்
 கண்ட துண்டங்க ணிமிர்ந்ததுங் கறைநதி பலவுங்கண் டனர்விண்ணோர்.

(இ - ள்.) தண்டகனென்னும் பெயரினையுடைய அவன் நீண்ட வில்லினை வணக்கி விரைவாக நெருங்கிய நெருப்புக் கணைகளைச் சிதறி ஒருமுறை போர்க்களத்தைச் சுற்றிவந்தான். அவன் வில்லைக் கையிற் கொண்டதனையும், அம்புகளைத் தொடுத்தலையும் அறியாராகி, இருநிலம் தீண்டாமெய்கள் எழுந்தாடுவதையும் உடற்கண்டங்கள் குவிந்ததையும் அவ்விடத்துப் பெருக்கெடுத்தாகிய குருதிநதி பலவற்றையும் விண்ணோர் கண்டன ரென்க.

(வி - ம்.) ஆட்டம் - ஆடுதல் : தொழிற்பெயர். வயக்களம் - ஈண்டுப் போர்க்களம். குறையுடல் முன்னர்க் கூறினாம் ஆண்டுக் காண்க. கறை - குருதி. விண்ணோர் அறிகிலர் கண்ட துண்டங் கண்டனரென வினைமுடிபு செய்க.

(223)

 ஒளிம றைத்தது திறந்தென மொய்யிரு ளுடைந்தது போன்ஞாலம்
 நெளிபெ ரும்படை யிறுதலு நெடுங்களம் வெளிபட நேர்நோக்கி
 விளிவ டுத்ததோ நம்படைக் கெனநகைத் தெஞ்சொரா யிரவெள்ளம்
 வளையப் போரளப் பான்கதிர் மாற்றலன் வஞ்சினத் தொடும்போந்தான்.

(இ - ள்.) சூரியனாகிய வொளியை மறைத்ததாகிய வொரு பொருள் நீங்க இருளுடைந்தாற்போல நிலனெளியத்தக்க பெரிய சேனை கெடுதலும், நெடிய போர்க்களம் வெளியாக் கண்கூடாகக் கண்டு நம் படையினுக்கு அழிவு வந்ததோ என்று வீரநகை செய்து இறவாது எஞ்சிய ஓராயிரம் வெள்ளம்படை தன்னைச்சுற்றப் போரினை அளவிடு பவனைப்போலப் பானுகோபன் சூளுரை செய்தலோடு வந்தன னென்க.

(வி - ம்.) போர்க்களத்தை ஒளியாகவும், அவுணர் படையினை இருளாகவுங் கொள்க.

(224)

 வீற்று வீற்றுவெஞ் சரந்தொடுத் தாடமர் விளைத்தபூ தர்கடாளை
 நாற்று செங்கையை யுரத்தினைக் களத்தினை நானிலம் படத்தாழ்த்தான்
 ஆற்று நீரெனச் சோரிவார்ந் துடற்குறை யலைத்தன வலியில்லார்
 காற்று ணைக்கொரு காற்றொழில் புதுக்கின ருக்கிரன் கனன்றேற்றான்.

(இ - ள்.) வேறுவே றிடங்களில் கொடிய அம்புகளைத் தொடுத்து வென்றி யெய்துதற் கேதுவாகிய போரினைச்செய்யப் பூதர்கள் தாளினையும்,