பக்கம் எண் :

724தணிகைப் புராணம்

தொங்கவிட்ட செவ்விய கையினையும், மார்பினையும், கண்டத்தினையும் நிலத்தின்கட் பொருந்தும்படி வீழ்த்தினன். யாற்று நீர் போலக் குருதியொழுகி உடற் குறைகளை யலைத்தலைச் செய்தன. எதிர்த்துப் போர்செய்யும் வன்மையில்லார் இரண்டடிகளுக்கும் ஒப்பற்ற காற்றொழிலாகிய சேறலைப் புதிதாக வுளவாக்கினாரென்க. இதனைக் கண்ட உக்கிரனென்பான் அழற்சியுற் றெதிர்த்தன னென்க.

(வி - ம்.) வீற்றுவீற்று - வேறுவேறு. கால் - அடி. காற்றொழில் புதுக்கல் - ஈண்டு ஓடல்.

(225)

 நெடிய தண்டொடு நேர்ந்தவுக் கிரனுட னிரைத்தனன் கணைமாரி
 அடிகொள் பந்தெனப் பட்டுமீண் டனவது கண்டெழு விடுத்தான்கைப்
 பிடிகொ டண்டினா லதுசிதர்த் தாயிரம் பெருக்குமுப் பதுமான்றேர்
 நடைய றுத்தெழுந் தார்த்தனன் வேறுதேர் நண்ணியக் கதையெய்தான்.

(இ - ள்.) நெடிய தண்டினோடு எதிர்ந்த உக்கிரனென்பவனுடைய உடலின்கண்ணே கணைமழையை நிரைத்தனன். அப்பாணங்கள் சுவர் முதலியவற்றில் அடித்துத் திரும்புதலைக்கொண்ட பந்தினைப் போல அவன்மேற்பட்டு மீண்டன. அங்ஙனம் மீண்டதனைக் கண்டு எழுவென்னும் படைக்கலத்தினை விடுத்தான். உக்கிரனென்பான் கையிற் பிடித்துள்ள தண்டத்தால் அவ்வெழுவைப் பொடிசெய்து ஆயிரமென்னும் எண்ணால் முப்பதென்னு மெண்ணைப் பெருக்கினாற் போதரும் குதிரைகள் பூட்டிய தேர்கள் செல்லுதலைக் கெடுத்து ஆரவாரஞ் செய்தனன். பானுகோபன் வேறு தேரின்கட் பொருந்தி அவ்வுக்கிரன் கையின்கண்ணுள்ள தண்டினை யெய்தன
னென்க.

(226)

(வி - ம்.) எழு - தூண் போன்ற ஒருவகை ஆயுதம்.

 அம்பி னக்கதை பொடித்தலு முக்கிர னழன்றுதே ரொடும்பற்றி
 உம்ப ரோக்கினன் விழுந்தவ னுக்கிரன் றன்னையும் பரினோச்சி
 வெம்பு தேரொன்றி னிவர்ந்துவே தன்றரு வேலினை யெதிர்விட்டான்
 நம்பி சோர்ந்தனன் குன்றொடு தண்டிநேர் நடந்தெறிந் தனனார்த்தான்.

(இ - ள்.) பானுகோபன் அம்புகளா னக்கதையைப் பொடிசெய்ய உக்கிரன் அழற்சியுற்றுத் தேரினோடும் பிடித்து வானின்கண் வீசினான். அங்ஙனம் வீச வீழ்ந்தவனாகிய பானுகோபன் உக்கிரனையும் வானின் கண்ணே வீசுதல்செய்து வெய்ய தேரொன்றினில் ஏறிப் பிரமன்றனக் களித்த வேற்படையை அவனெதிரே விட்டனன். நிறைந்த குணங்களையுடையனாகிய உக்கிரன் சோர்வடைந்தனன். ஒரு மலையினோடு தண்டி யென்பவன் அப்பானுகோப னெதிரே சென்று மலையினைப் பானுகோபன் மேலே யெறிந்து முழக்கஞ் செய்தா னென்க.

(வி - ம்.) ஓக்கினன் - வீசினன். நம்பி - உக்கிரன்.

(227)

 குன்றி றுத்தலு மெழுக்கொடு குரகதங் குமைத்தன னவனெற்றி
 வன்றி றற்கணை யயுதமுய்த் தமர்த்திற மாற்றின னதுகண்டு
 நின்ற குன்றமொன் றகழ்தரு பினாகியு நின்றனன் கணைமூழ்கி
 று சாரதத் தலைவரெல் லாமம ருஞற்றின ருலைவுற்றார்.