| (இ - ள்.) தண்டி யென்பவன் எறிந்த குன்றத்தினைப் பானுகோபன் கெடுக்க எழுவென்னும் படையினைத் தண்டி யென்பவன் கைக்கொடு அக்கோபன் தேரிற்கட்டிய குதிரைகளைக் கெடுத்தான். அத்தண்டி யென்பவன் நெற்றியின்கண் மிக்க வலியினையுடைய பாணங்கள் பதினாயிரத்தைச் செலுத்திப் போரின் வகையை நீக்கினன். அங்ஙனம் நீக்குதலைக் கண்ணுற்று அங்குநின்ற மலையொன்றினைத் தோண்டிக் கையிற்கொண்ட பினாகி யென்பவனும், பானுகோபன் எய்த கணை மழையான் மூழ்கி நின்றனன். பொருந்திய பூதத்தலைவர்களியாவரும் போரினைச் செய்தாராகி வருந்தினா ரென்க. (வி - ம்.) குரகதம்- குதிரை. அயுதம் - பதினாயிரம். சாரதர் - பூதர். (228) | | ஆய தோல்விகண் டிலக்கரும் பெரிதம ராடினர் வருகாலைத் | | | தீய னுய்த்தகோன் மாற்றினர் மேற்செலச் செலுத்தின ரதுநோனான் | | | பாய வாளிக ளெண்ணில தொடுத்தவர் பரப்பிய கணைநூறி | | | ஏயெ னச்சிலை யிலக்கமு மறுத்தன னெறுழ்ச்சிலை யறலோடும். |
(இ - ள்.) இங்ஙனம் பூதத்தலைவர்கள் வெந்நிடலாகிய தோல்வியினைக் கண்டு இலக்கவீரரும் பெரிதும் போர்புரிந்து வருகின்ற காலத்துத் தீமையுடையோனாகிய பானுகோபன் செலுத்திய கணைகளை நீக்கி அவன்மேற் பாணங்கள் செல்ல உய்த்தார்கள். அங்ஙன முய்த்தலைப் பொறாதவனாகிய பானுகோபன் அளவில்லனவாகிய பரவிய கணைகளைத் தொடுத்தல் செய்து அவ்விலக்கர்கள் தன்மேற் பரவச்செய்த கணைகளைக் கெடுத்து யாவரும் ஏயென்று இகழ்ச்சிசெய்ய இலக்கம் வில்லினையு மறுத்தனன். அங்ஙனம் வலியவிற்கள் ஒடிய. (வி - ம்.) ஏ - இகழ்ச்சிக்குறிப்பு. நோனான் - பொறான். பாய - பரவிய. (229) | | வேறு வான்சிலை வளைத்தவு ணன்விடு விசிகநுண் டுகளாக்கி | | | ஏறு தேர்பரி பாகினைச் சிதைத்தன ரிரதமொன் றவன்பாய்ந்து | | | சீறி நூறுநூ றாயிரஞ் சிலீமுகஞ் செலுத்திவார் சிலைதேரும் | | | கூறு செய்தகன் மருமத்து மழுத்தினன் கூர்ங்கணை சமர்நீத்தார். |
(இ - ள்.) வேறு பெரிய வில்லினை வணக்கி பானுகோபன் விட்ட பாணங்களை நுண்ணிய துகளாகச் செய்து ஏறிவந்த தேரினையும் அத்தேரிற் பூட்டிய குதிரையினையும், அத்தேரினையூர்ந்த பாகனையும் கெடுத்தார்கள். அக்கோபன் ஒரு தேரின்கட் பாய்ந்து சீற்றமுற்று நூறு நூறாயிரங் கணைகளைச் செலுத்தி அவ் விலக்கர் பிடித்த நீண்ட வில்லினையும், ஏறிய தேரினையும் வெவ்வேறாம்படி கூறுபடுத்திப் பலகூரிய கணைகளை உரத்தின்கண்ணும் அழுந்தச் செய்தான். அவர்கள் போரைத் துறந்தாரென்க. (வி - ம்.) விசிகம் - பாணம். பாகு - பாகன். (230) |