| பொடி செய்து எழுநூறு கணைகளை மாலையினை அணிந்த அழகிய புயத்தி னிடத்துச் செலுத்தித் தாவி அவன் பெரிய கையின்கண்ணுள்ள வில்லினை முரித்தா னென்க. (வி - ம்.) வீரமார்த்தாண்டன் - முற்கூறிய தினகரன். நீறு - பொடி. தார் - மாலை. தாய் - தாவி. (233) | | முரித்த வீரன்மார் பத்திடை நாந்தக முடுக்கினன் முனிவீரன் | | | பரித்த நாந்தகத் தழுத்தினன் பதகன்குப் பாயம்பா றிடத்தீயோன் | | | உரத்தி னாந்தக முரீஇக்குளத் தழுத்தின னுதிரமோ டுயிர்சோர்ந்தான் | | | தெரித்து வீரராக் கதனெதிர்த் தாயிரஞ் சிலீமுக மேல்விட்டான். |
(இ - ள்.) அங்ஙனம் வில்லினை முறித்த வீரமார்த்தாண்டன் நெஞ்சிடத்து வாளினை யழுத்தினன். அங்ஙனமழுந்த முனிவுற்ற வீரமார்த்தாண்டன் தன் மார்பிலழுந்திய அவ்வாளினைப் பறித்துப் பாதகனாகிய பானுகோபன் மெய்ப்பை கிழிய மார்பின்கணழுத்தினான். அப்பானுகோபன் தன் மார்பின்கணுள்ள அவ்வாளினை யுருவி வீரமார்த்தாண்டன் நெற்றியின்க ணழுத்தினான். செந்நீரொழுகலோடு வீரமார்த்தாண்டனுயிர் சோர்வுற்றான். இங்ஙனமுயிர் சோர்தலை யறிந்து வீரராக்கத னென்பான் எதிர்த்தாயிரங் கணைகளைப் பானுகோபன் மேல்விட்டா னென்க. (வி - ம்.) நாந்தகம் - வாள். முடுக்கல் - செலுத்தல். குப்பாயம் - உடம்புக்கீடு. பள்ளிக் குப்பாயத்தர் என்னும் திருவாசகத்தா னிதனையறிக. குளம் - நெற்றி. தெரிந்தென்பது விகாரம். சிலீமுகம் - அம்பு. (234) | | விட்ட வாளிகள் சூர்மகன் விலக்கிவெங் கணைகணூற் றினிற்பாகை | | | அட்ட னன்கடி தொருவனை யமைத்தொரா யிரங்கணை யான்மோலிக் | | | கட்ட ழித்தனன் வீரராக் கதன்கருந் தானவ ரிறைமைந்தன் | | | முட்டு நாணினன் மோலிவே றணிந்தவன் மொய்சிலை தொடுத்தீர்ந்தான். |
(இ - ள்.) சூரன் மகனாகிய பானுகோபன் வீரராக்கத னென்பான் விட்ட கணைகளை நீக்கி நூறு கொடிய கணைகளால் பாகனை யழித்தனன். வீரராக்கதன் விரைவில் வேறொரு பாகனை அமைத்து ஆயிரங் கணைகளால் முடியின் வலியினையழித்தனன். கரிய அவுணர்கள் தலைவனாகிய சூரன் மகன் நிறைந்த நாணினையுடையனாய் வேறு முடியினைக் கவித்து அவ் வீரராக்கதன் செறிந்த சிலையினைக் கணைகளைத் தொடுத்துப் பிளந்தன னென்க. (வி - ம்.) பாகு - பாகன். மோலி - முடி. (235) | | மற்றொர் வார்சிலை பற்றுமுன் றேர்ப்பரி மாய்த்தனன் மற்றோர்தேர் | | | உற்ற காலையிற் கைச்சிலை துமித்தன னுருத்திராக் கதனோர்வேல் | | | பற்றி யோக்கின னதனையும் பொடித்தனன் பானுகோ பனையண்மிப் | | | பொற்ற தேரொடு மந்தரத் தோச்சினன் புழுங்கிவிண் ணெழுமன்னான். |
|