| (இ - ள்.) வீரராக்கதன் வேறொரு நீண்ட வில்லினைப் பிடித்தற்கு முன்னர்த் தேரிற் கட்டிய குதிரையைப் பானுகோபன் கெடுத்தனன். வீரராக்கதன் வேறொரு தேரின்கட் பொருந்திய காலையில், கையின்கண் ணுள்ள வில்லினைப் பானுகோபன் றுண்டஞ்செய்தனன். கோபித்து வீரராக்கதன் ஒரு வேலைப்பற்றி வீசினான். பானுகோபன் அவ்வேலினையும் பொடி செய்தான். அப் பானுகோபனை வீரராக்கத னெருங்கிப் பொலிவுற்ற தேருடனே அவனை வானின்கண் ணெறிந்தான். அங்ஙன மெறிதலான் புழுக்கமுற்று வானின்கட் செல்கின்ற அவன். (வி - ம்.) பொற்ற - பொலிவுற்ற. (236) | | வேதன் முன்றரும் வேலினை விடுத்தனன் வீரராக் கதன்சோர்ந்தான் | | | பூத லம்விழு தானவன் வேறொரு பொற்றதே ரிவர்ந்துற்றான் | | | கோதில் வீரர்க ளைவரும் பெருஞ்சமர் குயிற்றினர் வலிதேய்ந்தார் | | | ஈது கண்டன னன்றுநன் றெனநகைத் தெதிர்த்தனன் விறன்மொய்ம்பன். |
(இ - ள்.) பானுகோபன் பிரமன் முன்றனக்களித்த வேற்படையினை விட்டனன். வீரராக்கத னென்பவன் சோர்வுற்றுக் கீழே வீழ்ந்தனன். மேலே சென்று நிலத்தின்கண் விழுகின்ற தானவனாகிய பானுகோபன் மற்றொரு பொலிவுற்ற தேரின்கண்ணே யேறினான். குற்றமில்லாத (வீரகோளரி) வீரமார்த்தாண்டன் வீரராக்கதனீங்கிய வீரவாகுதேவரை யொழித்து ஐவரும் பெரிய போரினைச்செய்து வலிகெட்டனர். இதனைக் கண்டனனாகி "நன்று நன்று" என்று வீரநகைசெய்து வீரவாகுதேவன் எதிர்த்தா னென்க. (வி - ம்.) வேதன் - பிரமன். பொற்ற - பொலிவுற்ற. விறல் - வெற்றி. (237) | | கண்டு தானவன் வெகுண்டுநீ தூதனாங் கள்வனா தலினின்னை | | | மண்டி யாருயி ருண்பது பழியலால் வருவதொன் றிலையானும் | | | உண்டு னாருயி ரெஞ்சினார் தமையெலா முறுத்துவன் சிறையென்றான் | | | அண்டர் நாயக னிளவலு முறுவலித் தருளிலிக் கிதுகூறும். |
(இ - ள்.) பானுகோபன் வீரவாகுவைப் பார்த்துச் சீற்றமுறீஇ முன்னர் வந்த தூதனாகிய கள்ளனாதலின் நின்னை நெருங்கி அரிய உயிரைக் குடிப்பதால் எனக்குறுவது பழியன்றி வேறொன்றில்லையாயினும் முன்னர் உன்னரிய உயிரையுண்டு இறவா தெஞ்சியவர்களை யெல்லாம் சிறையின்கட் சேர்ப்பல் என்றனன். தேவர்கட்குத் தலைவனாகிய முருகனுக்கிளவலாகிய வீரவாகு அருளில்லாதவனாகிய பானு கோபனுக்கு இதனைச் சொல்வான். (வி - ம்.) உயிரை உண்பதால் வருவது பழியலால் ஒன்றிலையாயினும் எனக்கூட்டுக. (238) | | நுங்க ளாருயிர் மேலெழுந் தூதன்யா னன்றியு நுமரெல்லாம் | | | பொங்கு மன்பினா லடிதொழு மிறைதரு புதல்வனா தலினென்னை |
|