| | செம்ம லக்கணை சிந்துபு சிதறி னானொரு கோடிமேல் | | | இம்மு றைத்தொகை யின்றியு மெய்து போர்விளை யாடினார் | | | அம்ம வாளியின் மாய்குவ ரறுத்து மெய்யுருத் தோற்றுவர் | | | மும்மை வையக முஞ்சர மூரித் தூணிய தாக்கினார். |
(இ - ள்.) தலைவனாகிய வீரவாகு அவ்விலக்க மென்னு மளவினையுடைய கணையைச் செலுத்தி ஒரு கோடி கணையை மேலுஞ் சிதறினானென்க. இம்முறையான் அளவின்றியும் கணைகளைச் செலுத்திப் போர் விளையாடலைச் செய்தனர். என்ன ஆச்சரியம் இருவரும் கணைகளின் மறைவார்கள். அங்ஙனம் மறைத்த கணை நீக்கி வெளிப்படுவார்கள். மூன்றுலகினையும் வலியினையுடைய அம்பறாக் கூடாகச் செய்தனர் என்க. (வி - ம்.) மெய்யுருத் தோற்றல் - வெளிப்படுதல். மூரி - வலிமை. அம்ம : வியப்பிடைச் சொல். மாய்தல் - மறைதல். (242) | | ஆடு மெல்லையில் வாகுவி னங்கை வில்லிறுத் தானவன் | | | பீடி லான்சிலை குரிசிலும் பேசு முன்னறுத் தானவன் | | | நாடி யாயிரங் கணையுர நடவி னானிவ னவன்முடி | | | ஓட வேழ்சர முய்த்தன னுட்கி வேறுக வித்தனன். |
(இ - ள்.) இங்ஙனம் போர் செய்யுங் காலத்துப் பானுகோபன் வீரவாகுவின் அகங்கையிலுள்ள வில்லினை யறுத்தனன். தலைவனாகிய வீரவாகு பெருமையிலனாகிய பானுகோபன் வில்லினைச் சொல் வெளிப்படு முன்னர் அறுத்தனன். அப்பானு கோபன் ஆராய்ந்து ஆயிரங்கணைகளை உரத்தின் கண்ணே செலுத்தினான். இவ்வீரவாகு அப்பானு கோபன் முடிசெல்ல ஏழு கணைகளைச் செலுத்தினான். பானுகோபன் வெட்க முற்று வேறு முடிகளை யணிந்தான் என்க. (வி - ம்.) உட்கல் - நாணல். (243) | | கவித்த வன்கவ யங்கெடக் கடவு ளாயிரத் தீர்ந்தனன் | | | அவித்த நன்மைய னாயிர மழுத்தி னான்குளத் தவைநிலம் | | | குவித்தொ ராயிர மாயிரங் குவவுத் தோளுர மானனம் | | | பவித்தி ரன்கொளத் தொடுத்தனன் பானு கோபனங் கயர்ந்தனன். |
(இ - ள்.) முடிகவித்தவனாகிய பானுகோபன் உடம்புக்கீடு கெடவீரவாகு தேவன் ஆயிரங் கணைகளால் பிளந்தனன். நன்மையிலனாகிய பானுகோபன் வீரவாகுவின் நெற்றியின் கண்ணே ஆயிரங் கணைகளைச் செலுத்தினான். அவ்வாயிரங் கணைகளையும் நிலத்தின் கண்ணே பொடியாகக் குவியச் செய்து புனிதனாகிய வீரவாகு இரண்டாயிரங் கணைகளைத் திரண்ட தோளும் உரமும் முகமுமாகிய இடங்களிற்படும்படி தொடுத்தான். அதனாற் பானுகோபன் அயர்ச்சியுற்றானென்க. (வி - ம்.) அவித்த நன்மையன் - நன்மையில்லாதவன். இதனைவிட்ட வேட்கைய ரென்றாற் போலக் கொள்க. குளம் - நெற்றி. ஆனனம் - முகம். (244) |