| வேறு | | நாயக னயர்த்தலு நயத்தவிற லாளர் | | | மேயினர் தெழித்தனர் வெகுண்டமர் விளைத்தார் | | | காயிரு மழுத்திகிரி காதுகதை யாதி | | | ஏயின வனைத்துமுற வேந்தலது நோக்கி. |
(இ - ள்.) படைத்தலைவனாகிய பானுகோபன் சோர அவன் பால் நயப்புற்ற வெற்றியை யாளும் வீரர்கள் போரிற் பொருந்தி முழக்கிச் சீற்றங்கொண்டு போர் செய்தனர். எரிக்கின்ற பெரிய மழுப்படையும் மோதுகின்ற தண்ட முதலிய படைக்கலங்களும் செலுத்த அப்படைக்கலங்கள் யாவும் வந்து சேரத் தலைவனாகிய வீரவாகு அங்ஙனம் வருதலை நோக்கி யென்க. (வி - ம்.) மேயினன் தெழித்தனன்; எச்சமுற்று. காதுதல் - மோதுதல். ஏய்தல் - பொருந்துதல். (245) | | கார்முகம் வளைத்துவிடு காலனிகர் வாளி | | | போர்முக மிறுத்தவர் புயங்கைமுடி வார்தாள் | | | பார்முகம் விசும்புமுகம் பாய்திசைமு கஞ்சூர் | | | ஊர்முகம் விழுத்தின வுலைந்தபடை முற்றும். |
(இ - ள்.) வில்லினை வளைத்துச் செலுத்திய இயமனை யொத்த வாளிகள் போரின் கண்ணே தங்கினோர் புயம், கை, முடி, தாளாகிய இவைகளைப் பூமியின் கண்ணும் வானின் கண்ணும் பரவிய பலதிசையின் கண்ணும் சூரனது ஊரின் கண்ணும் விழும்படி செய்தன. படையெல்லாம் குலைந்தன வென்க. (வி - ம்.) கார்முகம் - வில். வார் - நெடிய. சூர் - சூரன். (246) | | நொந்தவிறல் வீரரு நொறிற்கணமும் யாரும் | | | வந்துபொரு வாகுவுழை மல்கினர்க ளாங்கே | | | புந்திதளர் சூர்மதலை பொன்றுமுணர் வெய்திச் | | | சிந்துபடை நோக்கியெரி சிந்தியெதிர் சென்று. |
(இ - ள்.) வருந்திய வலியினையுடைய வீரரும் வேகத்தினையுடைய பூத கணமும் ஏனைய யாவரும் வந்து போர் செய்கின்ற வீரவாகு தேவரின் பக்கத்தே நெருங்கினார்கள். அப்பொழுது மனந்தளர்வுற்ற சூரன் மகனாகிய பானுகோபன் சோர்ந்த அறிவு தெளியப் பெற்றுச் சிதறிய படையினைப் பார்த்து நெருப்பைச் சிந்தி யெதிரே சென்று என்க. (வி - ம்.) நொறில் - வேகம். வாகு - வீரவாகு. (247) | | தோன்றன்மிசை வாளிக டுறுத்தின னறுத்தாங் | | | கான்றவ னவன்மிசை யடைச்சின னகற்றி | | | மான்றவன் மணிப்பொனிர தந்தபவொர் வையம் | | | சான்றவ னிவர்ந்துதவழ் தேர்சிலை தகர்த்தான். |
|