| (இ - ள்.) தலைவனாகிய வீரவாகுவின்மீது கணைகளைச் செலுத்தினான். அங்ஙனஞ் செலுத்திய கணைகளை உயர்ந்தோனாகிய வீரவாகு அறுத்து அப்பானு கோபன் மீது கணைகளைச் செலுத்தினான். பானுகோபன் கணைகளை நீக்கிப் பெருமை பொருந்திய வீரவாகுவின் மணிகள் குயிற்றிய அழகிய தேரினைக் கெடுக்க, வேறொரு ஒப்பற்ற தேரின்கண் சான்றவனாகிய வீரவாகு ஏறிப் பானுகோபனது தேரையும், சிலையையும் பொடி செய்தன னென்க. (வி - ம்.) அடைச்சல் - ஈண்டுடைதல். வையம் - தேர். தவழ் - ஊர்கின்ற. தகர்த்தல் - கெடுத்தல். (248) | | வேறிரத மேறியெழு நூறுவிசி கந்தேர்ந் | | | தூறுபட வீரனுர முய்ப்பவுவ னம்பால் | | | தேறுசிலை தேர்பரிசி தர்த்தவுணன் மார்பம் | | | ஆறுதிர மாகவழி யாக்கினன வன்றான். |
(இ - ள்.) பானுகோபன் வேறொரு தேரின்கண்ணேறி எழுநூறு கணைகளை ஆராய்ந்து கெடும்படி வீரவாகு மார்பின்கண்ணே செலுத்த வீரவாகு கணையால் பானுகோபன் போரில் தெளிவுற்ற சிலையையும், தேரையும் கெடுத்துப் பானுகோபன் மார்பத்தைக் குருதியாறு செல்லும் வழியாகச் செய்தான். அப்பானுகோபன். (வி - ம்.) விசிகம் - கணை. உவன் - இவன். (249) | | மற்றுமொரு வையமிசை வாவுதலும் வீரன் | | | பிற்றலையி ருந்தகணை பெய்தபெருந் தூணி | | | அற்றுவிழ வற்றமரு மப்புழையி னூடு | | | பொற்றகணை யேயினன்பொ றாதவன்வி யந்தான். |
(இ - ள்.) வேறொரு தேரின்கண்ணே தாவ வீரவாகு பானுகோபன் பின் பக்கத்தே தங்கிய அம்புக் கூடானது அற்று விழும் வண்ணம் முன்னர்க் கணைக டைத்த மார்பின்கண்ணுள்ள புழை நடுவே பொலிவு பெற்ற கணைகளைச் செலுத்தினான். ஆச்சரியந் தாங்க முடியாதவனாகி வியப்புற்றானென்க. (வி - ம்.) வீரர் யாவரும் குறியினை எதிரே வைத்தெய்தல் வழக்காறாம். வீரவாகு தேவர் கோபன் பின் புறத்திலுள்ள அம்புக்கூட்டை அவன் மார்பின் புழை வழியே கணை சென்று அற்று விழும் வண்ணம் ஏயினமை கண்டு வீரவாகுவின் விற்றொழிலினை வியந்தானென்பார், "பெருந்தூணி யற்றுவிழ வற்ற மருப்புழையினூடு பொற்றகணையேயினன் பொறாதவன் வியந்தான்ழு என்றார். (250) | | இன்னவனை வாளியினி றுத்தலரி தாமென் | | | றன்னையொரு பாலமரு மண்ணறரு மோகம் | | | மன்னுபடை தூண்டவிறல் வாகுவர னோக்கித் | | | துன்னுபடை யாலறிவு தோன்றுமென நின்றான். |
|