| (இ - ள்.) ஓட்டிய ஞானக்கணை மீண்டு தந்தையாகிய குகனையண்மியது. வலி பொருந்திய வீரவாகு இக்கோபனுள்ளேயுள்ள உயிரினை இப்பொழுதே நீக்குவல் என்று மூன்று கண்ணினையுடைய இறைவன் படையினைப் பிடித்தனன். இதனை யறிந்த அவுணனாகிய பானுகோபன் வானின்கண் மறைந்து நகர் சென்றா னென்க. (வி - ம்.) தெரித்து : விகாரம். முக்கணுடயான் படை - பாசுபசாஸ்திரம். (254) | | கரந்தவுண னேகியது கண்டுவிறல் வாகு | | | பரந்தபடை யோடுவளர் பாசறைய டுத்தான் | | | அரந்தையொடு தன்பகைய கன்றதறி வெய்யோன் | | | சுரந்தகளி யாற்கடறு ளைந்திடவ டுத்தான். |
(இ - ள்.) ஒளிந்து அவுணனாகிய பானுகோபன் சென்றதைக் கண்ட வெற்றியினையுடைய வீரவாகு பரவிய தானையோடு வீரம் வளர்தற் கேதுவாகிய மாடிவீட்டினை யண்மினான். துன்பத்தினோடு தன்பகைவனாகிய அவுணன் மறைந்தோடியதை யறிந்த வெங்கதிர்க் கடவுள் பெருகிய களிப்பாற் கடலின்கண்ணே மூழ்க அடுத்தன னென்க. (வி - ம்.) கரந்து - ஒளிந்து. அரந்தை - துன்பம். வெய்யோன் - ஞாயிறு. தன்பகை - கதிர்ப்பகை : பானுகோபன். (255) | | மண்ணிடை யிறுந்தகுவர் வான்புலனி றந்தார் | | | நண்ணுமுனு ணர்ச்சியினம் மாரிவரென் னாது | | | விண்ணவரொ டும்பொருத வீழ்குருதி யெங்குந் | | | துண்ணெனவி ரிந்ததுற ழுஞ்சுடர்செவ் வானம். |
(இ - ள்.) அந்திக்காலத்தே தோன்றும் ஒளியுடைய செவ்வானமானது நிலத்தின்கண்ணே இறந்த அவுணர் வானுலகின்கட் சென்றவர் பொருந்திய முற்பிறவியின் அறிவினான் தேவர்களை நம்மவராவாரென்று கருதாது தேவர்களோடும் போர்செய்த காரணத்தால் வீழ்ந்த குருதி எல்லா விடங்களிலும் விரைவாகப் பரவியதை யொக்கு மென்க. (வி - ம்.) இவ்வுலகின்கட் போரிலிறந்த அவுணர்கள் போரிலிறத்தலான் தேவராகி வீரசுவர்க்கத்தின்கட் சென்றும் முற்பிறவிப் பயிற்சி வயத்தால் ஆண்டுள்ள தேவரோடுடற்றாமை கொள்ளா தாண்டும் போர்செய்து வீழ்ந்த குருதியே செவ்வானமாகு மென்பார். "விண்ணவரொடும் பொருதுவீழ் குருதியெங்கும் - துண்ணென விரிந்துற ழுஞ்சுடர்செவ் வானம்" என்றார். முன்னுணர்ச்சி - முற்பிறவி வாசனை. உறழும் - ஒக்கும். (256) | | வாங்குபரி வேடமதின் மாமதிய நாப்பண் | | | ஓங்கிருடு மிப்பவொளிர் வித்தவெண்வி ளக்கம் | | | பாங்கருடுச் சேனையொளி பற்றலர்கண் முற்றும் | | | வீங்கியமு னைப்புலம்வி ழைந்ததகல் வானம். |
|