| | தெள்ளி யோர்ப்பொருஞ் செயற்கு விஞ்சுற | | | உள்ளு வான்பொரு ளுதவு பூங்கடல் | | | தொள்ளை யோர்ப்பொருந் தொடுதற் கேற்புற | | | அள்ளு நீரெழு மார்வக் கேணிகள். |
(இ - ள்.) நெய்தனிலமாக்கள் முத்து பவள முதலிய பொருள்களை மூழ்கி எடுக்குந் தொழிலுக்கு மிகுதியாக யாவரும் விரும்பத்தக்க உயரிய பொருள்களை அவர்களுக்குக் கொடுக்கின்ற பொலிவுபெற்ற கடல் (பல நூல்களையும் நுனித்தறிந்த) தெளிவுடையாரை ஒக்கும். தோண்டிய அளவுக்கு இயைய மொள்ளத்தக்க நீர் மேலெழுந்தூறுகின்ற விருப்பத்தையுடைய கேணிகள் கீழோரை ஒக்கும். (வி - ம்.) செயல் : முத்தெடுக்கும்பொருட்டு மூழ்குகின்ற செய்கை. விஞ்சுற - மிகுதியாக. உள்ளுதல் - விரும்புதல். 'உள்ளத்தான் உள்ளலும்' என்னும் குறளானறிக. வான்பொருள் - முத்து பவளம் முதலிய பொருள்கள். தொள்ளையோர் - கீழோர். கடல்பொரும், கேணிகள் பொரும் என முடிக்க. "தொட்டனைத்தூறு மணற்கேணி" என்னும் திருக்குறளின் கருத்து தொடுதற்கேற்புற "அள்ளுநீரெழுமார்வக்கேணிகள்" என்னும் பகுதியில் அமைந்திருத்தலைக் காண்க. கீழோர், பிறர் முயற்சியளவினதாகிய பயனையே அளிப்பர். தெள்ளியோர் பிறர் முயற்சி சிறிதாயினும் பெரும்பயன் அளிப்பரென்பது தெளிவாம். இது தற்குறிப்பேற்றவ (144) | | கருவு யிர்ப்பன கங்கு டிப்பன | | | மருவி னத்தினை வாய்ம டுப்பன | | | உருகு நோக்கினா லுவப்ப மீன்குலம் | | | உருவ மாதிக ளுறழ்வ காட்டுமே. |
(இ - ள்.) (தம்மாலீனப்பட்டவை இன்னவை என்று தெரிந்து கொள்ளும்பொருட்டுத் தாமீன்ற) முட்டைகளை மோப்பனவும் (அங்ஙனமோந்தறிந்துகொண்டபின்னர் அம்முட்டையீன்ற சோகம் தீர்தற் பொருட்டு) நீரைக் குடிப்பனவும் (தம்முடன்) பொருந்தும் சிறுமீன்களாகிய) இனத்தினையுண்பனவும் (தாமீன்ற முட்டைகள் வெடிக்கப் பின் அவற்றினின்றும் குஞ்சுகள் உண்டாகி யுய்யும்பொருட்டு நெஞ்சு) உருகுதற்கு ஏதுவாகிய கட்பார்வையால் மகிழ்வனவும் (ஆகிய) மீன் கூட்டங்கள் உருவவிரசகந்தம் (கந்தவிரசவுருவமாகத் தம்மிடத்துத் தலைகீழாய்) மாறிநிற்பனவற்றைக் காட்டாநிற்கும். ஏ : அசை. (வி - ம்.) மீன்குலம் காட்டும் என முடிக்க. உருகும் என்பது காரியத்தின் கண்வந்த பெயரெச்சம்; அது நோக்கு என்னும் காரணப்பெயர் கொண்டது. பஞ்சபூதங்களில் ஆகாயமாகிய மூல பூதத்தினின்று வாயுவும், அவ்வாயுவினின்று தேயுவும், தேயுவினின்று அப்பும், அவ்வப்புவினின்று பிருதிவியும் தோன்றி ஆகாயம், வாயு, தேயு, அப்பு, பிருதிவி எனத் தோற்றமுறையாக இருக்கும் ஐம்பூதங்களின் குணங்களையெடுத்து முறைப்படுத்துங்கால் தோற்றமுறைமை யொழித்து, காரியத்தினும் காரணம் சிறந்தமையின் காரியத்தின்முன்னரே காரணம் வைத்தல் மரபாம். அது கருதி மூலபூதமாகிய ஆகாயமானது வாயுவா |