| (இ - ள்.) பூதவீரர்கள் இவ்வரிசைகளைக் கெடுத்துப் பூழியாக்கி அவ்வீதியின்கண்ணே எதிர்ந்த தானவர்களைக் கோறல் செய்து மேன் மாடங்களின் கூடங்களைத் தோண்டியெறிந்து எதிர்ந்தவரை வருத்தி நடுங்க, மிக்க வீரமுழக்கத்தை உளவாகக் கண்டார்க்கு விருப்பம் உண்டாகும் பேரழகினையுடைய பிள்ளையார் திருவடித் தொழும்பு செய்யும் வீரவாகு என்பான் காற்றின் கணையையும், அழற்படையினையும் ஒருசேர எடுத்து நீண்ட இந்நகரத்தை உண்க வெனக்கூறி விடுத்தனன். அவ்விரு படைக்கலங்களு மெழுந்தன. உலகங்களெல்லாம் நெளிவுற்றன வென்க. (வி - ம்.) சூளிகை - மேன்மாடம். காலழற்படை - உம்மைத் தொகை. நிமிர்தல் - எழுதல். (373) | | உருகி மாழையும் வெள்ளியும் பிறவு | | | மொழுகி வீதிக ளாறெனக் கிடப்பப் | | | பெருகு பைங்கதிர்க் குலமணி நீறாய்ப் | | | பெயர்ந்து வானகம் போர்வையின் மறைப்பப் | | | பொருமு தானவ ரிறந்தவெள் ளென்பும் | | | பூழியாயல மரநக ரிங்குத் | | | திருவ ழிந்திடு செய்திகண் டோடிச் | | | சென்ற தூதுவர் முழுவதுஞ் சொற்றார். |
(இ - ள்.) செம்பொன்னும், வெண்பொன்னும் பிறபொருள்களும் உருகி ஓடுதலுற்று வீதிகளெல்லாம் யாற்றினைப்போலக் கிடப்ப, ஒளி மிக்கபசிய கதிர்க்கூட்டங்களையுடைய சிறந்த அரதனங்கள் சாம்பராகிச் சென்று போர்வையைப்போலவானிடத்தை மறையா நிற்ப, வருந்துகின்ற அசுரர்கள் இறந்தமையா னுடம்பினின்றும் நீங்கிய வெள்ளென்புகள் தூளியாகிச் சுழலாநிற்ப, நகர் அழகு கெடுகின்ற செயலினைப்பார்த்து ஓடிச்சென்ற ஒற்றர் இங்கு நிகழ்ந்த நிகழ்ச்சி முழுவதையும் சொற்றன ரென்க. (வி - ம்.) கிடப்ப, மறைப்ப, அலமர, கண்டு ஓடிச்சொற்றனரென வினைமுடிபு செய்க. மாழை - பொன். பொருமுதல் - வருந்துதல். திரு - அழகு. (374) | | ஊழி நாட்பெயு மேகங்க ளனைத்து | | | மொருங்கு கூயவு ணர்க்கிறை யேவ | | | ஆழி யேழும்வந் திறுத்தென மேக | | | மடர்ந்து தாரைக ணிரைப்பவங் கவற்றைப் | | | பாழி வீரனு மூழிநா ளங்கிப் | | | படையி னீக்கின னதுதெரி சூரன் | | | கேழி லாதநந் தேரினைக் கொணர்திர் | | | கெடுத்து மாற்றல ரூக்கமென் றுருத்தான். |
|