பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்777

(இ - ள்.) அவுணர்களுக் கிறைவனாகிய சூரன் ஊழிக்காலத்தின் கண்ணே நீரைப் பொழிகின்ற மேகங்களனைத்தையு மொருசேர வழைத் தேவாநிற்க, எழுகடலும் வந்து தங்கினாற்போல மேகங்கள் நெருங்கி மழைத் தாரையை நிரையாநிற்க, வலியினை யுடைய வீரவாகுவும் ஊழிக்காலத்தின் கண்ணுளவாகும் அழற்படையினால் அப்பொழுதே அவற்றினை நீக்கினன். அங்ஙனம் நீக்கியதையறிந்த சூரன் ஒப்பில்லாத நமது தேரினைக்கொண்டு வாருங்கோள் பகைவருள்ளக் கிளர்ச்சியைக் கெடுப்போமென்று சினங்கொண்டன னென்க.

(வி - ம்.) கேழ் - ஒப்பு, இதனைக் "கேழ் நிற மொளியொப்பாகுழுமென்னும் நிகண்டா னறிக. கெடுத்தும் தன்மைப்பன்மை வினைமுற்று.

(375)

 ஆங்கு டங்கம ரிரணியன் றந்தை
           யடிவ ணங்கின னாற்றல ராயின்
 ஓங்கு போர்புரிந் தகற்றலாம் வரந்தந்
           தூக்க நல்கிய விறைவனைப் பணிந்து
 நீங்கல் காணுவ தல்லது போரா
           னீக்கங் காணுதல் யாவரே வல்லார்
 பாங்க லாதன புரிதியென் றுரைத்தான்
           பதகன் சீறினன் போர்விடை கொண்டான்.

(இ - ள்.) அவ்விடத்துச் சூரனுடன் தங்கிய அவன் மைந்தனாகிய இரணியனென்பவன் தந்தையாகிய சூரனடியினை வணங்கித் (தந்தையே) பகைவர்கள் நம்மினும் வன்மையிலராயிருப்பின் நாம் பெரும் போரினை இயற்றி இவணின்றும் நீங்கலாகும். நாம் விரும்பிய வரங்களையெல்லாம் வேண்டிய வேண்டியாங் கருளித் (தேவர் முதலியோர்களையும் ஏவல் கொள்ளும்) உள்ளக்கிளர்ச்சியினையும் அளித்த இறைமைக்குண முடையானை வணங்கி இவணின்றும் எழுந்தருளச் செய்வதல்லாமல் (அவ்விறைவனோடு போரினைச் செய்து) அப்போர்த் தொழிலான் நீங்குதலைச் செய்தலில் வன்மையுடையார் ஒருவருமிலர். ஆதலாற் றகுதியற்றனவாகிய செயல்களைச் செய்கின்றனை என்றிடித்துரைத்தனன். பதகனாகிய சூரனும் சினமுற்றனன். அவன்பால் இரணியனென்பான் போரினுக்குச் செல்ல விடைபெற்றனன்.

(வி - ம்.) இரணியன் - சூரன்மைந்தன். பதகன் - சூரன்.

(376)

 துணைவ ராயிரர் தலைவரா யிரர்தற்
           சூழ நான்குநூற் றிரட்டிவெள் ளந்தேர்
 பணைம ருப்பெறுழ் வேழமத் தொகைய
           பாய்ப ரித்திர ளாயிரத் திருநூ
 றணவு மள்ளரு மத்தொகை யினர்க
           ளனைய வெள்ளநா லாயிர நெரிய
 இணையில் பற்பல படைக்கலந் தழுவி
           யிரத மூர்ந்தெழு கடலெனப் படர்ந்தான்.