| (இ - ள்.) துணைவராயிரவரும், படைத்தலைவராயிரவரும், தன் பக்கலிற் சூழவும் எண்ணூறுவெள்ளந் தேரும், மேற்கூறிய எண்ணூறு வெள்ளமென்னும் அளவினை யுடையனவாகிய பருத்த கொம்பினையும், வலியினையு முடைய யானைகளும், ஆயிரத் திருநூறுவெள்ள மென்னும் அளவினையுடைய தாவிச் செல்கின்ற குதிரைகளும், அவ்வளவினராகப் பொருந்துகின்ற வீரருமாகிய அந்த நாலாயிர வெள்ளமென்னும் அளவினையுடைய படைநெரியவும், ஒப்பில்லனவாகிய பல படைக்கலங்களைக் கைக்கொண்டு தேரினைச் செலுத்தி ஊழிக்காலத் தெழுகின்ற கடலினைப்போலச் சென்றன னென்க. (வி - ம்.) எழுகடல் : வினைத்தொகை. பெயரெனக் கொள்ளினு மிழுக்காது. சூழ, நெரியவும் என்னும் எண்ணும்மைகள் விகாரத்தாற் றொக்கன. தொகைய : அகர வீற்றன்பெறாத பலவறிசொல். (377) | | பாரி டத்தொகை நகரழிக் கின்ற | | | பான்மை நோக்கினன் வெஞ்சினங் கொண்டான் | | | சேர ரும்படை நால்வகைப் பிரிவாய்ச் | | | செல்ல வுந்தின னால்வகைப் பிரிவாய்ச் | | | சார தப்பெரும் படையுநேர் செல்லச் | | | சமர்வி ளைந்தன விரணியன் பாலாம் | | | வீர வன்படை படர்வன நோக்கி | | | வீர வாகுபொள் ளெனவெதிர்த் தமர்த்தான். |
(இ - ள்.) இரணிய னென்பான் கூட்டமாகிய பூதங்கள் நகரழிக்கின்ற தன்மையினைக் கண்ணுற்றவனாகி வெவ்விய சினங்கொண்டனன். திரண்ட அரிய தம்படையினை நால்வகைப் பிரிவாகிச் செல்லச் செலுத்தினன். இதனையறிந்த பூதப்பெரும்படையும் நால்வகைப் பிரிவினவாகி நேரே செல்லப் போர்நிகழ்ந்தன. இரணியன் பக்கலிலுள்ள வீரத்தினை யுடைய வலிய படைகள் வருவனவற்றை நோக்கி வீரவாகு பொருக்கென வெழுந்து எதிர்த்துப் போரினைச் செய்தான். (வி - ம்.) இரணியனானவன் தன் சேனையை நான்கு கூறுசெய்து ஏனைய மூன்று கூறுகளையும் ஏனைய இடங்களிற் செலுத்தி ஒரு கூற்றினைத் தம் பக்கலில் நிறுவித்தானதற்குத் தலைவனாகச் சேறலின் "இரணியன் வீரவன்படை யெனாது" "இரணியன் பாலாம் வீரவன் படை" என்றார். சேர் - திரட்சி, இதனை "சேரேதிரட்சி" (தொல். உரி.) என்பதால் அறிக. (378) வேறு | | வார்சிலை வளைத்துநிமிர் வாளிபல கோடிமழை | | | போல்விடுவ வெங்கும் விரவி | | | ஆர்சில வெடுத்தவிர தங்களை யழித்தன | | | வழித்தன பணைக்கை மதமா |
|