| | போர்சிதர் வயப்பரி யழித்தன வழித்தன | | | பொலங்கழலின் மள்ள பெருநாள் | | | பார்சிதறு டற்றுணிம றைத்தது மறைத்தது | | | பரந்தகடல் வார்ந்த குருதி. |
(இ - ள்.) நீண்ட வில்லினை வளைத்து மழையினைப்போல விடப் படுவனவாகிய பலகோடிக்கணக்கான நிமிர்ந்தகணைகள் போர்க்கள மெங்கணும் விரவி சில ஆரக்கால் எடுத்தன, சில தேர்களை யழித்தன, பருத்தகை யினையும் மதத்தையுமுடைய யானைகளை அழித்தன. வெற்றியினையுடைய குதிரைகளை யழித்தன. பொன்னாலாகிய வீரக்கழலினையணிந்த போர்வீரர்கள் வாழ்நாளை யழித்தன. உடலினின்றும் சிதறுகின்ற தசைத்துண்டங்களை மறைத்தது ஒழுகிய செந்நீர்; அது பரந்த கடலினையும் மறைத்த தென்க. (வி - ம்.) ஆர் - ஆரைக்கால். பொலன் - பொன், "பொலனென் கிளவியீறுகெட" தொல். எழு . புள்ளி, சூத்திரத்தா னறிக. விடுவ - விடப்படுவனவாகிய கணைகள். (379) | | சேனைபெரி துந்தபுதல் கண்டுகன கன்வளை | | | சிலைத்தொழில் பயிற்று விசிகம் | | | சோனைமழை போன்மெனநி ரத்தலுமு லைந்தனர் | | | துவன்றுகண வீர ரதுபோ | | | தியானையெதிர் சிங்கமென நீலனுரு மிற்பிளிறி | | | யேற்றனன்வெ குண்டி ரணியன் | | | ஊனைவடி வேலுரம்வி டுத்தனன வன்கதையி | | | னோச்சியிர தந்த புதனன். |
(இ - ள்.) படைபெரிதுங் கெடுதலைக் கண்ணுற்று இரணிய னென்பான் வில்லினை வளைத்தல் செய்து விற்றொழிலிற் றான்பயின்ற பயிற்சியால் கணைகளை விடாமழை போலுமென்று கண்டார் சொல்லும் வண்ணம் நிரைக்க நெருங்கிய பூதகணத் தலைவர்கள் கெட்டார்கள் : அஞ்ஞான்று நீலனென்பான் இடியினைப்போல முழக்கஞ்செய்து யானையினை எதிர்க்கின்ற சிங்கமென்று கண்டார்கழற எதிர்ந்தனன். இரணிய னென்பவன் சினங்கொண்டு ஊரினை வடிக்கின்ற வேற்படையினை மார்பின்கண் விடுத்தான். நீலனென்பவன் தண்டினாலறைந்து கனகன் றேரினையும் புடைத்தன னென்க. (வி - ம்.) தபுத்தல் - கெடுத்தல். உருமில் ஐந்தாவது ஒப்புப் பொருள். அவன் - நீலன். ஊன் - தசை. வடிவேல் : வினைத்தொகை. சந்தநோக்கித் தபுத்தன னென்பது தபுதன னென்றாயது விகாரம். (380) | | வாவியொரு தேரைவடி வாளிபொழி யக்கனகன் | | | வார்குருதி சோர வுடலின் | | | மேவினனெ டுத்திரதம் விண்ணிடையு கைத்தனன் | | | விளங்குதிற னீல னவுணன் |
|