| | தாவியொரு தேர்புகவ ரக்கடிதெ ழுந்துதட | | | மார்பிறவெ ருக்கி வரதன் | | | பாவிநில னிற்படமி தித்தனனு ருட்டுபு | | | பழங்கண்மிகு வித்த னனரோ. |
(இ - ள்.) இரணியனென்பான் ஒரு தேரின்கண்தாவிக் கூரியவாளி களைப் பொழிய, எல்லாத்திசையினும் விளங்குதற் கேதுவாகிய வலி யினையுடைய நீலனென்பவன் உடலின்கண் செந்நீர் வார்ந்து சோரா நிற்கப் பொருந்தி இரணியன் றேரினையெடுத்து வானின்கண் வீசினன். பாவியாகிய இரணியன் தாவியொரு தேரின்கண் ஏறச்சிறந்தவனாகிய நீலன் அவன் நிலத்தின்கட் பொருந்த மிதித்து மிகுதியுந்துன்படையச் செய்தனன். (வி - ம்.) தேரை : வேற்றுமை மயக்கம். எருக்குதல் - அடித்தல். பழங்கண் - துன்பம், மேவினன், மிதித்தன னென்பன எச்சமுற்றுக்கள். அரோ, ஓ, அசைகள். (381) | | ஆற்றலில னாய்த்தளரு முத்தலையி னான்மனுவ் | | | கத்துறநி னைந்து தொழலும் | | | தோற்றியவ னென்னவொரு மாயையுரு வன்சமர் | | | தொடங்கவிவ னாவி விரைவில் | | | காற்றுவலெ னக்கடிது நீலனொரு தண்டுகொடு | | | காதமறை வுற்ற ததுமெய் | | | தேற்றிலன்வெ குட்சியொடு நிற்பவது சேயிடைவி | | | ளங்கியணு கும்பெ யர்தரும். |
(இ - ள்.) போரியற்றும் வன்மையிலனாகிச் சோர்வினையுறும் முத்தலையினையுடையவனாகிய இரணியன் ஒருமந்திரத்தினை மனத்தின் கண்ணே பொருந்தச் சிந்தனை செய்து வணங்க, அவனைப்போல ஒரு மாயைவடிவந் தோற்றிப் போரினைத் தொடங்க இவனுயிரை விரைவாக நீக்குவேனென்று நீலனென்பான் ஒரு தண்டினைக்கொண்டு சாட அவ்வடிவம் மறைவுற்றது. அங்ஙனம் மறைந்தமை கண்டு நீலன் உண்மையைத் தெரியானாய்ச் சினத்தினோடுநிற்ப, அவ்வடிவம் சேய்மைக்கண்ணே விளக்கமுற் றண்மைக்கண்ணே யணுகும். மீண்டும் சேய்மைக்கண்ணே நீங்கு மென்க. (வி - ம்.) முத்தலையினான் - மூன்றுதலையினையுடைய இரணியன். வெகுட்சி - கோபம். ஒருசாரார் முத்தலையினான் என்பதனை உத்தலை யினான் எனப்பிரித்து அப்போர்க்களரியிலுள்ள இரணியனெனப் பொருள் கூறுவர். (382) | | விண்ணிடையெ ழுங்கனக வெற்பினையு றும்பரிதி | | | வீழவிர தத்தி லணவும் | | | மண்ணிடைவி ரைந்துதிரி யுங்கடல டுக்கும்வட் | | | வைக்கனலொ டும்வி ரவுறும் |
|