| | எண்ணிபமு மஞ்சவெளி திற்றிசைதொ றும்படரு | | | மின்னவுரு வோடு மலையா | | | அண்ணல்விற னீலனயர் வுற்றிஃதெ னாமெனவ | | | கத்தினனி யாயு மளவில். |
(இ - ள்.) அவ்வடிவம் வானின்கண் ணெழாநிற்கும்; பொன்மலையினைப் பொருந்தாநிற்கும். செங்கதிர்ச்செல்வன் விரும்பியேறுந் தேரின்கட் பொருந்தாநிற்கும். நிலத்தின்கண்ணே விரைவுற்றுச் சுழலாநிற்கும். கடலினைப் பொருந்தாநிற்கும். வடவைத் தீயினோடு விரவுற்றுநிற்கும். எண்டிக்கினுமுள்ள யானைகளஞ்ச எளிதாக அத்திசைகடோறுஞ் செல்லாநிற்கும். இத்தன்மைத்தாகிய வடிவினோடு மலைந்து வீரத்தாற் றலைமைபெற்ற நீலன் அயர்வுற்று இவ்வுரு யாதாகுமென்று மிக ஆராய்கின்ற காலத்து. (வி - ம்.) வீழ்தல்- விரும்பல், "தாம்வீழ்வார் மென்றோட்டுயிலி னினிதுகொல், தாமரைக்கண்ணானுலகு" என்னுங் குறளானறிக. (383) | | ஒன்றெனவி ருந்துபல மாயைபுரி யும்வடி | | | வுலப்பிலுறு வயு லகெலாம் | | | துன்றவிது மாயையென நீலனுண ரத்தகுவன் | | | சோகமொழி வுற்றெ "தரா | | | மன்றவினி வெல்வலென மாயையுரு வோடுற | | | மரீஇயமர்தொ டங்க வொருபால் | | | நின்றவிறல் வாகுமுன டுத்துவளர் சேதன | | | நெடும்படைதொ டுத்து விடலும். |
(இ - ள்.) ஒன்றாகவிருந்து பலமாயையைச் செய்கின்ற வடிவம் அளவில்லவாகிய வடிவாய் உலகெங்கணும் பொருந்த (அதனைக் கண்ணுற்ற நீலன்) இதுமாயை வடிவாகுமென்றறிய அசுரனாகிய இரணியன் மயக்கம் நீங்கி எழுந்து துணிவாக யான் வெல்வேனென்று தானுள வாக்கிய மாயை வடிவங்களோடு மிகப் பொருந்திப் போரினைச்செய்ய அப்பறந்தலையினொரு பகுதிக்கணின்ற வீரவாகுதேவர் அவன் முன்னர்ச் சென்று அறிவு வடிவாகிய நீண்ட படையினைத் தொடுத்து. (வி - ம்.) உலப்பில்லுரு - அளவில்லாத வடிவம். மன்ற - துணிவாக. சேதனம் - அறிவு. விடலும், செயவெனெச்சப் பொருடரும் உம்மீற்று வினையெச்சம். (384) | | நீங்கியது மாயையது கண்டிரணி யன்கன | | | னெருப்பெழவெ குண்டு சிலைகை | | | வாங்கிவிடு வெங்கணைக ளாயிரமு ரத்திடை | | | மரீஇப்பொடிக ளாக விறலோன் | | | வீங்குகணை நூறுபடர் வித்தவனெ டுங்கொடிகை | | | வில்லரண நூற வொருவில் |
|