| | தாங்கியவு ணன்கணையெ டுப்பவிறல் வாகுகணை | | | சார்த்தினனொ ராயி ரமெதிர். |
(இ - ள்.) (சேதனப் படையைத் தொடுத்த வளவின்) மாயை வடிவம் நீங்கிற்று; அதனைக் கண்ணுற்ற இரணியன் றன்கண்ணிலழலெழச் சினந்து வில்லினைக் கையிலெடுத்துச் செலுத்திய ஆயிரங் கொடிய கணைகள் வீரவாகுவின் மார்பின்கண்ணேபட்டுப் பொடியாக அவ்வாகுப் பெயருடையான் உயர்ந்த நூறு கணைகளைப் படர்வித்து அவ்விரணியனது நீண்ட கொடியினையும், கையின்கண்ணுள்ள வில்லினையும் உடம்புக்கீட்டையுங் கெடுக்க இரணியன் வேறொரு வில்லினை யேந்திக் கணைகளை யெடுக்க வீரவாகுவென்பான் எதிராக ஆயிரங்கணைகளை விடுத்தனன். (வி - ம்.) அரணம் - உடம்புக்கீடு, கவசம். சார்த்தல் - விடுத்தல், இலக்கணை. (385) | | கைத்தலமெ டுத்தசிலை வாளிவளர் தூணிகலி | | | னப்பரிக டேர்வ லவனை | | | மொத்தினவி டுத்தகணை வேறுமொரு தேர்விரைவின் | | | முன்னவது வும்பொ டிசெய்தான் | | | எய்த்திரணி யன்பலரு மாய்வரவர் நீர்க்கடனி | | | யற்றவமை வாமெ னநினைந் | | | தத்தியின்ம றைந்தனன றிந்துவிறல் வாகுசய | | | மார்வளைபி டித்த னனரோ. |
(இ - ள்.) வீரவாகு எதிர் செலுத்திய ஆயிரங்கணைகள் கையின் கண்ணெடுத்த வில்லினையும், தங்குகின்ற அம்பறாக் கூட்டினையும், கடிவாளத்தையுடைய குதிரைகளையும், தேரினையும், தேர்ப்பாகனையும், மோதின. இரணியன் வேறொரு தேரின்கண் விரைவிற்செல்ல அடைய அத்தேரினையும் பொடியாக்கினன். இரணிய னென்பான் இளைத்து நஞ் சுற்றத்தவர் பலருமிப் போரின்கண் ணிறப்பர். அவர்கட்கு நீர்க்கடன் செய்யலாம் உயிர்பிழைத்திருப்பாம் என்று கருதிக் கடலின்கண் மறைந்தனன். இரணியன் போர்க்கு வெந்நிட்டு மறைந்ததனை யறிந்து வீரவாகு வெற்றியைக் குறிக்குஞ் சங்கினை யூதினனென்க. (வி - ம்.) கலினம் - கடிவாளம். முன்னுதல் - அடைதல். நீர்க்கடன் - பிண்டோதகக்கிரியை. அத்தி - கடல், "அத்தியினரசு பேர வாலமுந் தெரிக்கி லேங்க" என்னுங் கந்தபுராண வடியானுணர்க. பிடித்தல் - ஊதுதல், இலக்கணை. (386) | | நாற்றிசையி னுஞ்சமர்பு ரிந்தகண வீரரு | | | நலிந்தவுண ராயுண் முழுதும் | | | மாற்றினர்வ ளம்புரம ழிக்குமெழி னோக்கிய | | | வயங்குகதிர் தோற்றி யதுவே |
|