| | ஆற்றினர்நி கழ்ந்ததுரை யாடவயர் சூரனெதி | | | ரங்கிமுக னென்னு மதலை | | | சாற்றுகதி ரின்பகைத னக்குநிக ராற்றல்பெறு | | | தானவன்வ ணங்கி யெழுவான். |
(இ - ள்.) நான்கு திசையின்கண்ணும் போரினைச்செய்த பூதகண வீரர்கள் வருத்தி அவுணர்கள் வாணாளைப் போக்கினர். வளத்தினையுடைய சூரன் நகரத்தினைப் பூதர்கள் அழிக்கும் அழகினைக் காணச் செங்கதிர்மண்டிலந் தோன்றியது. ஒற்றியறியுந் தொழிலின் வழியி லமைந்தோர் ஈண்டு நிகழ்ந்த நிகழ்ச்சியினைச் சொல்ல அயர்ச்சியுறுகின்ற சூரன் முன்னர் அழன்முகனென்னும் அச்சூரன் மகன் யாவரானும் புகழப்படுகின்ற பானுகோபனுக்கு நிகரான வன்மைபெற்ற அசுரன் றந்தையினை வணங்கிப் போர்க்கு எழுவானாயினன். (வி - ம்.) வேய் - ஒற்று, இதனைப் "புடைகெடப் போகிய வேயே" என்னுந் தொல்காப்பியச் சூத்தரத்தா னறிக. (387) | | ஆயிரவெள் ளம்பகடு தேர்த்தொகையு மன்னதடு | | | மாவதனி ரட்டி வயவர் | | | மேயினரு லப்பிலர்க ளாகவிர தங்கடவி | | | வேகமொடு சென்ற ணவினான் | | | ஏயினன்மு ரட்படையை யீண்டுகண வீரரு | | | மெதிர்ந்தமர்வி ளைத்த னர்பலர் | | | மாயிருநி லத்திடைவி ழுந்தனரு டைந்தவுணர் | | | மாதிரமி டைந்த னர்களால். |
(இ - ள்.) யானைகள் ஆயிரவெள்ள மென்னும் அளவினையுடையன. தேரும் அவ்வளவின. பகைவரைக் கொல்கின்ற குதிரைகள் இரண்டாயிர வெள்ளமென்னும் அளவினையுடைய படைவீரர்கள் அளவிலராகத் தன் பின்னர்வரத் தேரினையூர்ந்து விரைவாகச்சென்று பொருந்தினனாய் வலிமைமிக்க படைக்கலங்களைச் செலுத்தினான். அப்போர்க்களத்தின்கட் செறிந்த பூதவீரர்களும் எதிர்த்துப் போரினைச் செய்தனர். அவுணர்களிற் பலர் பெரிய நிலத்தின்கண் வீழ்ந்திறந்தனர். போரிற்றோற்றுடைந்தோடினவர்கள் திசைகடோறுஞ் சென்று செறிந்தன ரென்க. (வி - ம்.) அணவினான் - எச்சமுற்று. உடைந்த அவுணரென்பதிற் பெயரெச்சத்தீறு தொக்கது. "புகழ்புரிந் தில்லிலோர்க்கில்லை" என்பது போல. (388) வேறு | | சோம கண்டகன் சோமன் மேகன்முன் னான தொல்படை காவலர் | | | நாம வேலவ னுந்த மண்டி நலிந்த பூதரொ டாடினார் | | | காமர் வீரபு ரந்த ரன்கடு கச்சி லைத்தொழி லாற்றுபு | | | சோம கண்டக னைப்ப டுத்தவர் தூண்டு தேர்களி றுத்தனன். |
|