| (இ - ள்.) சோமகண்டகன், சோமன், மேகன் என்னும் பழமையான பெயரினையுடைய படைத்தலைவர்கள் மூவரும் கண்டார்க்கு அச்சத்தினைச் செய்யும் வேற்படையினையுடைய குமாரப் புத்தேள் அனுப்ப நெருங்கித் தங்களை வருத்திய பூதப்படையினோடு போரினைச் செய்தனர். போர்த்தொழிலிலீடுபட்டுக் கண்டார் யாவருக்கும் விருப்பம் தரத்தக்க வீரபுரந்தர னென்பவன் விரைவாக விற்றொழிலினைச் செய்து சோமகண்டகனென்னும் படைத்தலைவனைக் கெடுத்து அவர்கள் செலுத்தி வந்த தேர்களையும் அழித்தன னென்க. (வி - ம்.) நாம் - அச்சம். வீரபுரந்தரனென்பவன் சூரன் படைத் தலைவர்களி லொருவன். (389) | | வேறு தேர்கொடு சூழ்ந்தெ லோரும்வெ குண்டு வாளிசொ ரிந்தனர் | | | ஊறு செம்புனல் வார வீரனு குத்து நீள்சிலை தேரெலாம் | | | நூறி நெற்றியு ரம்பு யத்தினு னித்த பொத்திர மேற்றினான் | | | மாறி னார்வலி யாரு மெய்ப்பிடை மண்ட வைகிய மேகனும். |
(இ - ள்.) யாவரும் வேறு தேர்களின் மேற்கொண்டு சுற்றிச் சினமுற்றுக் கணைகளைச் சொரிந்தார்கள். அவர்கள் சொரிந்த கணைகளால் செம்புனலூறுதலுற்றொழுக வீரவாகு கணைகளைச் சிந்தி நீண்ட வில், தேர், எல்லாவற்றையுங் கெடுத்து நுதலின்கண்ணும், மார்பின்கண்ணும், புயத்தின்கண்ணும் கூரிய கணைகள் ஏறும்வண்ணம் செய்தனன். யாவரும் வன்மை நீங்கினார்கள். இளைப்பிடையே வந்து பொருந்தப்பெற்ற மேகனென்பவன். (வி - ம்.) பொத்திரம் - கணை. ஏற்றல் - ஏறச்செய்தல். (390) | | வார்ந்த தண்டினெ திர்ந்து தேர்ப்பரி மாவ துக்கினன் வீரனும் | | | நேர்ந்து ஞாங்கர்வி டுத்து மேகனி றங்கி ழித்துயி ரோம்பினான் | | | தீர்ந்து ளார்படை வேந்த ரென்றுசி னந்து தீமுகன் வாளிகள் | | | ஆர்ந்த பூதரி னுய்த்து மிக்கலை செய்ய வேற்றன னிந்திரன். |
(இ - ள்.) நேரிய தண்டினோ டெதிர்த்து வீரவாகு தேரிற்கட்டிய வேகமாகச் செல்கின்ற குதிரையினைக் கொன்றனன். வீரவாகுவும் எதிர்த்து வேற்படை யொன்றினை விடுத்து மேகனென்னும் படைத்தலைவன் மார்பைக் கிழித்து உயிரினை நீக்கினான். படைகாவலர்கள் நம்மாட்டுப் பற்றுவிட்டன ரென்று சினங்கொண்டு அழன்முகன் கணைகளை நிறைந்த பூதகணங்களின்மேற் செலுத்தி மிகவருத்து தலைச்செய்ய வீரபுரந்தரன் வந்தெதிர்த்தன னென்க. (வி - ம்.) வார்தல் - நேர்தல், இதனை "வார்தல் போத லொழுகன் மூன்றும் நேர்தலும் நெடுமையுஞ் செய்யும்பொருள" (தொல். சொல். உரி.) சூத்திரத்தா னுணர்க. ஓம்பல் - ஒழித்தல். (391) | | விண்ணெ லாம்பக ழிக்கு லங்கள்வி ராவவெஞ்சம ராடுழித் | | | திண்ணி ருஞ்சிலை தேர்த டிந்துசி லீமு கம்பல மார்பிடை | | | நண்ண வங்கிமு கன்செ லுத்தந லிந்த னன்மக வானவன் | | | துண்ணெ னத்துணை யான நால்வரு மூவ ருங்கணை தூண்டினார். |
|