பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்785

(இ - ள்.) வீரபுரந்தரனும் அழன்முகனுமாகிய அவ்விருவரும் விண்ணிடமெல்லாம் கணையி்ன் குப்பைகள் கலக்க வெவ்விய போரினைச் செய்யுஞான்று, வன்மையையுடைய பெரிய வில்லினை வெட்டிப் பல அம்புகளை மார்பின்கண்ணே செல்லும்படி அழன்முகன் செலுத்தா நிற்ப. வீரபுரந்தரன் வருத்தமுற்றனன். இங்ஙனம் வருத்தமுற்றதனைக் கண்ணுற்று ஒன்பான் வீரரில் வாகுப்பெய ரமலனை ஒழிந்த இவனுக்குத் துணைவரான எழுவரும் விரைவாகக் கணைகளைச் செலுத்தின ரென்க.

(392)

 விட்ட வாளிவி லக்கி வீரர்பு யத்தின் வெஞ்சர மேற்றினான்
 பட்ட யர்ந்தவர் தீமு கன்படர் தேரும் வில்லும்ப டுத்துரம்
 நெட்டி ருங்கள நெற்றி கால்கர நீள்ச ரம்பல கோத்தனர்
 வட்ட வாழிய தொன்று வாவினன் மாய்த்து மார்புந்தி றந்தனர்.

(இ - ள்.) எழுவரும் விட்ட வாளிகளை அழன்முகன் விலக்கி அவ்வீரர் தோள்களிற் பாணங்கள் ஏறும்படி செய்தனன். அவன் கணைகள் படுதலா னயர்ந்தவராகிய எழுவரும் அழன்முகன் ஏறிச் செல்லுந் தேரினையும் வில்லினையுங் கெடுத்து அவன் மார்பின்கண்ணும், நீண்ட பெரிய கண்டத்தின்கண்ணும், நுதலின்கண்ணும், தாளின்கண்ணும், கையின்கண்ணும் பல கணைகள் கோக்கும்படி செலுத்தினார்கள். வட்டமாகிய உருளினை யுடையதாகிய வேறொரு தேரின்கட் டாவினன். அத்தேரினையுங் கெடுத்து அவன் மார்பத்தையும் பிளந்தன ரென்க.

(வி - ம்.) பட்டு, செய்தெனெச்சங் காரணப் பொருளில் வந்தது. ஆழியது - உருளையுடையது.

(393)

 ஓடும் வேறிர தம்பு குந்துமை பாகன் மாப்படை தொட்டனன்
 நீடு செங்கனல் கான்ற டுப்பநெ ருப்பி ரும்படை யீதென
 ஆடு வெஞ்சமர் வீரர் நீர்ப்படை யாங்கெ திர்ப்பவி டுத்தனர்
 வீட நீர்ப்படை யுண்டு வீரர்க ளாவி யுண்டது மீண்டதே.

(இ - ள்.) அழன்முகன் விரைவாகச் செல்கின்ற வேறொரு தேரின் கட் சென்று உமையம்மையாரை ஒருபக்கலிலுடைய இறைவன் படைக்கலத்தினைத் தொடுத்தனன். அப்படைமிக்க செந்நிறத்தையுடைய அழலினைக் கான்று பொர, ஈது பெரிய அழற்படை யென்று கருதி வெவ்விய போரினைப் புரிகின்ற ஏழுவீரர்கள் அப்பொழுது இறைவன் படையை எதிர்க்கும்வண்ணம் நீர்ப்படையினை விட்டார்கள். அவ்விறைவன்படை நீர்ப்படைகெட அதனையுமுண்டு வீரர்கள் ஆவியினையுங் குடித்து மீண்டதென்க.

(வி - ம்.) உமைபாகன் மாப்படை - பாசுபதாஸ்திரம்.

(394)

 பூத ரஞ்சின ரஞ்ச லென்றுபொ ருக்கெ னக்கைய மைத்தலர்க்
 கோதை வார்புய வீர வாகுகொ தித்தெ திர்ப்பவ ழன்முகன்
 நீத னிச்சம ரென்னொ டிங்கணி கழ்த்த வுய்த்தது தெய்வதம்
 ஆத லானினை வெல்வ லேனைய ராக வெண்ணலை யென்றனன்.