பக்கம் எண் :

786தணிகைப் புராணம்

(இ - ள்.) (இறைவன் படைவீரர்க ளாவியினையுமுண்டு மீடலைக் கண்ணுற்ற) பூதப்படைக ளஞ்சினார்கள். அஞ்சாதே கொண்மின்களென்று கைத்தலங் காட்டி மலர்களாலாகிய மாலையினையணிந்த நீண்ட தோளினையுடைய வாகுப் பெயரோன் மனங்கொதிப்புற் றெதிர்க்க அழன்முகன், தெய்வமானது நீ என்னோடு ஒப்பற்ற போரினை யியற்றச் செலுத்தியது ஆகையால் நின்னை வேறல்செய்வேன் ஏனைய வீரராக என்னை எண்ணாதேகொள் என்றனனென்க.

(வி - ம்.) பொருக்கென - குறிப்புமொழி. தனி - ஒப்பற்ற. தெய்வதம் - தெய்வம். எண்ணலை - நினையாதே.

(395)

 கரந்து தன்னுரு நீங்க வல்லக திர்ப்ப கைக்கிளை யானுநீ
 அரந்தை யுற்றலை வாரி புக்கமர் வாற்க டுத்தமுன் னோனுநீ
 பரந்த தோல்வியி னானு மத்தகு பாலை யாகிய நின்னையான்
 விரிந்த மண்ணிடை யேனை யோரென வெண்ண லேன்விர காளனே.

(இ - ள்.) (இங்ஙனம் அழன்முகன் பிதற்றியதைச் செவியேற்ற வாகுப்பெயரமலன் தன் வடிவை மாயையான் மறைத்துப் போரினுக்கு அஞ்சிப் பிறக்கிட்டோடும் பானுகோபனுக்கு இளையோனும் நீ, போரினுக் கஞ்சித் துன்புற்று அலையினையுடைய கடலின்கண் மறைந்து தங்குவானாகிய இரணியனுக்குப் பொருந்திய தமையனும் நீ, விரிந்த தோல்வியினானும் அத்தன்மைத்தாகிய பகுதியினையுடைய நின்னை யான் விரிந்த நிலவுலகின்கண் போர்செய்யும் விரகினையுடையானே! ஏனைய விரகறியா வீரர்களைப்போல நின்னை யான் கருதுவே னல்லேனென்க. (வஞ்சகப் புகழ்ச்சி)

(வி - ம்.) அரந்தை - துன்பம். விரகு - சூழ்ச்சி. கதிர்ப்பகை - பானுகோபன். வாரி - கடல். முன்னோன் - தமையன்.

(396)

 நும்பி பின்வரு நும்பி தம்பியு மாக நீநுமை யன்றனை
 அம்பு வேலொடு நுந்தை காப்பினு நும்பி யாக்குவ னென்றனன்
 வெம்பு கின்றவி றற்பு யன்கனல் வெய்ய மாமுக னொயயென
 உம்ப ரஞ்சவ ணக்கு வார்சிலை நாணி னோதையு ரப்பினான்.

(இ - ள்.) கொதிக்கின்ற வாகுப்பெய ரமலன் அழன்முகனே! நுந் தம்பியாகிய இரணியனுக்குப் பின்னர்த் தோன்றிய நுந்தம்பியாகிய வச்சிரவாகு வென்பானுக்கு இறுமுறையான் நீ அவனுக்கு இளையோனாக, நும் முன்னோனாகிய பானுகோபனை கணையினோடும் வேலியினோடும் நும் தந்தையாகிய சூரனே காவல்புரியினும் இறுமுறையின நுந் தம்பியாகச் செய்வேனென்று கூறினான். கொடிய அழன்முகன் விரைவாக தேவர்களு மச்சுற வணக்கத்தக்க நீண்ட வில்லினின்றும் நாணினொலியை யுண்டாக்கினா னென்க.

(வி - ம்.) சூரன் மக்களாவார் பானுகோபன், அழன்முகன், இரணியன், வச்சிரவாகு வென்பவர் இவர் முறையே ஒருவருக்கொருவர் இளையோராவர். அழன்முகனே பிறப்பு முறையே முன்னோனாயினும் இறக்குமுறையான் உன்றம்பியாகிய இரணியனுக்கு இளவலாகிய வச்சிரவாகுவுக்கு இளவலாகச் செய்வேனென்பார், "நும்பிபின்வரு