பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்787

நும்பிதம்பியுமாகநீ" என்றார். பிறப்புமுறையான் உனக்கு முன்னோனாகிய பானுகோபனை இறப்புமுறையான் நினக்கு இளவலாக்குவே னென்பார், "நுமையன்றனை நும்பியாக்குவ னென்றனன்" என்றார். பானுகோபனும் அழன்முகனும் முன்னர்த்தோன்றி இறத்தல்பின் நிகழ்தலின் பிறப்புமுறையான் ஒருவருக்கொருவர் நீவிர் இளையவராக வுள்ளீர்கள் யான் இறப்புமுறையான் முன்பிறந்த வுங்களை இளையோர்களாக்குவேனென வீரவாகுதேவர் கூறினரென்க.

(397)

 கோதை வார்சிலை நம்பி யுங்குனி வித்து நாணொலி கொண்டனன்
 மாதி ரத்தொடு மண்ணும் விண்ணும றைத்து ளார்விசி கத்தினப்
 போது பொத்திர மாயி ரம்புனி தன்கு ளத்தில ழுத்திநின்
 றோத நீர்வளை வாயில் வைத்தவ னூதி னானுரு மேறென.

(இ - ள்.) குணங்களா னிறைந்தவனாகிய வீரவாகுவும் மாலையினை யணிந்த வில்லைவளைத்து நாணொலி செய்தனன். இருவருந் திசையினோடு நிலனையும் வானையும் கணைகளால் மறைத்தார்கள். அஞ்ஞான்று அழன் முகன் ஆயிரங்கணைகளை வாகுப்பெயரமலன் நுதலின்கண் செலுத்தி நின்று ஒலியினையுடைய கடலின்கட் டோன்றிய சங்கத்தினை இடியேற்றினைப்போல நின்று வாயின்கண் வைத்து ஊதினானென்க.

(வி - ம்.) குளம் - நெற்றி. பொத்திரம் - கணை.

(398)

வேறு

 ஒருங்காயிர வம்பாலவ னுறுதேர்பரி வில்லும்
 மருங்கேவிழு வித்தான்வய வீரன்கனன் முகவன்
 பொருங்காற்சக டொன்றேறினன் புகவிட்டன னொருதண்
 டிருங்காசினி விழவோர்கணை யெய்தானெறுழ் வீரன்.

(இ - ள்.) வெற்றியினையுடைய வீரவாகு ஒருசேர ஆயிரங் கணையான் அவன் பொருந்திய தேர், அத்தேரிற்பூட்டிய குதிரை, வில் என்னுமிவற்றைப் பக்கத்தே விழும்வண்ணம் செய்தான்; அழன்முகன் போர் செய்தற்குரிய காலினையுடைய ஒருதேரின்கண்ணேறி ஒருதண்டத்தினை வீரவாகுவின்மேற் செல்லும்படி விட்டனன். வலியினையுடைய வாகுப்பெயரமலன் அத்தண்டம் பெரிய பூமியின்கண் விழும்படி ஒரு கணையைத் தொடுத்தன னென்க.

(வி - ம்.) மருங்கு - பக்கம். சகடு - தேர். காசினி - நிலம். எறுழ் - வலிமை.

(399)

 சிலையொன்றனை வாங்கித்தழல் சிந்தும்வத னத்தோன்
 உலவைப்படை கூற்றுப்படை யென்றூழுறு படையும்
 பலவும்வரி சையினேவின னவைகொண்டவை பாற்றிக்
 கொலைமுற்றிய கணையாயிரங் கோத்தானுரத் தமரன்.

(இ - ள்.) அழன்முகன் ஒருவில்லினை வளைத்துக் காற்றின் படையும், கூற்றின் படையும், ஞாயிற்றுப் படையுமாகிய பலவற்றையும்