| வரிசையாகப் போக்கினன். கெடாத தேவனாகிய வீரவாகு அப்படைகளைக் கொண்டு அப் படைகளைக்கெடுத்து அழன்முகன் மார்பின்கண் கொல்லுந்தொழின் முதிர்ந்த ஆயிரங்கணைகளைச் செலுத்தினனென்க. (வி - ம்.) உலவை - காற்று. கூற்று - தென்றிசைக்கோன். என்றூழ் - செங்கதிர்க் கடவுள். (400) | | மடிந்தானென வீழ்ந்தானவன் சற்றேமயர் நீங்கி | | | மிடைந்தாடமர் புரிகாலையின் மெலிவெய்திடின் வருகென் | | | றடைந்தேபல நாளும்வழி படுகாளியை யகத்தால் | | | தொடர்ந்தானவள் படைபற்பல சூழத்தொடர் வுற்றாள். |
(இ - ள்.) அழன்முகனென்பான் வாகுப்பெயரமலன் போக்கிய ஆயிரங்கணையால் இறந்தானென்று யாவரும் கருதும்வண்ணம் நிலத்தின்கண் வீழ்ந்தனன். சிறிதுநேரஞ் சென்றபின்னர் மயக்கம் நீங்கி நெருங்கிய வென்றியைத் தரத்தக்க போரினைச் செய்யுங்காலத்து யான் பகைவனோடு பொருங்காலத்து மெலிவுறுவேனாயின் அஞ்ஞான்று எம்பக்கலில் துணையாக வரக்கடவாயென்று அடியினையடைந்து பல நாளும் வழிபாடு செய்கின்ற காளியை மனத்தின்கண் நினைத்தனன். அக்காளியும் இவன் வேண்டுகோட்கிணங்கி பலப்பல படைகள்சூழ எழுந்தனள். (வி - ம்.) அவன் - ஈண்டுத்தழன்முகன். ஆடு - வென்றி. தொடர்தல் - நினைத்தல் (இலக்கணை). தொடர்வுறுதல் - எழுந்தருளுதல். இஃதும் இலக்கணையேயாம். ஆல் : வேற்றுமை மயக்கம். (401) | | பார்த்தாளவன் மெலிவைப்படை பலவுந்தெறு வேனென் | | | றார்த்தாளுடன் வருகாளிய ரவரைச்செல வுய்த்தாள் | | | வேர்த்தார்பலர் கணவீரர்கள் வெகுண்டார்சில ரேற்றார் | | | தீர்த்தார்சில ருயிரைக்கனல் சிதர்கண்ணினள் கண்டாள். |
(இ - ள்.) அத்தழன்முகன் போர்க்கு மெலிவுற்றமையைக் காளி கண்கூடாகக் கண்டனள்; பகைவர்படை பலவற்றினும் இன்னே கொல்வேனென்று ஆரவாரஞ் செய்தனள். தனக்குத் துணையாக வந்த காளி கணங்களாகிய அவரைப் போரின்கண் செல்லும்படி உய்த்தாள். பல பூதகண வீரர்கள் வேர்த்தனராகி வெகுடலுற்றனர். சிலர் போரினையேற்றார். காளிப் படைகளினுயிரை நீக்கினார். அக்கினியைச் சிந்துகின்ற கண்ணினையுடையவளாகிய காளி இதனைக் கண்ணுற்றனள் என்க. (வி - ம்.) தெறுவேன் - கொல்வேன். காளியரவரை என்புழி அவரை : பகுதிப் பொருளது. (402) | | வெருவப்படை முழுதுண்கென விட்டாளொரு சூலம் | | | ஒருவக்கணை பலவீரனு கைத்தானஃ திறலும் | | | பெருவன்றிறன் மற்றொன்றது பெயர்வித்தன ளதுவும் | | | தரையிற்பட வெய்தான்பல சரமாரிக ணிரையின். |
|