| (இ - ள்.) அக்காளியானவள் ஒப்பற்ற சூலப்படையினைப் படை முற்றிலுமஞ்ச நீசென்று பகைவருயிரை உண்ணக் கடவாயெனக்கூறி உய்த்தனள். வாகுப்பெயரமலன் பலகணைகளை அச்சூலப்படை நீங்கச் செலுத்தினன். அங்ஙனஞ் செலுத்திய கணையால் அச்சூலப்படை கெட பெரிய வலிய திறலினையுடைய வேறொரு சூலப்படையினை மீளவுஞ் செலுத்தினள். அச்சூலப்படையும் தரையின்கண் வீழ்ந்து கெடும் வண்ணம் வரிசையாகப் பல சரங்களை மாரியினைப்போல் எய்தனன். (வி - ம்.) வெருவ - அஞ்சும்படி. உண்கென - விகாரம். (403) | | வாளங்கொடு வீரன்மணி யிரதம்புக வயவன் | | | தாளங்கற மார்பந்தன ரக்கையினெ றிந்தான் | | | நீளுங்கரு முகிலாமென நெய்த்தோருக வீழ்ந்தாள் | | | மீளுந்தொழி லினள்வீரனை வியந்தாள்பிறக் கிட்டாள். |
(இ - ள்.) அக்காளியானவள் ஒரு வாளினைக் கைக்கொண்டு வாகுப்பெயரோன் அழகிய தேரின்கண்ணே புகாநிற்ப வெற்றியினை யுடையவனாகிய அவ்வாகுவென்பான் அப்பொழுதே காளியின் தாளறவும், நெஞ்சு தளர்ச்சியுறவும் கையினாலெறிந்தனன். அக்காளி நீண்ட கரிய மேகமென்று கண்டோர் சொல்லும்வண்ணம் செந்நீரொழுகக் கீழேவிழுந்தனள். போர்க்கு ஆற்றாது மீளுந்தொழிலினளாகிய அக்காளி வீரனைச் சிறப்பித்துக் கூறினளாகிப் பின்னிட்டனள் என்க. (வி - ம்.) பிறக்கிடல் - பின்னிடல். வயவன் - ஈண்டு வீரவாகு. எறிதல் - ஈண்டடித்தல். (404) | | என்னேயிவ னாண்மைத்திற மெனவீதறி யவுணன் | | | கொன்னேசிலை வளைவித்தெதிர் குறுகிச்சர முய்த்தான் | | | இன்னேயிவ னிறவந்தன னெனவேந்தல்வி லக்கி | | | ஒன்னான்மிசை யப்புத்திர ளுறுவித்தனன் மாதோ. |
(இ - ள்.) காளி பிறக்கிட்டமையறிந்த அவுணனாகிய தழன்முகன் இவ்வாகுப் பெயரமலனது ஆண்மைத்திறமானது என்னே என்று கூறிச் சிலையினை வளைத்து வாகுப்பெயரோன் முன்னணுகி வீணே கணைகளைச் சிந்தினன். தலைவனாகிய வாகுப்பெயரோன் இப்பொழுதே இத்தழன்முகன் இறக்க வந்தானென்று இரக்கமுற்று அவன் எய்த பாணங்களை விலக்கி அப்பகைவன்மீது கணைத்திரள்களைச் சேர்ப்பித்தனன். (வி - ம்.) கொன் - வாளா. இற - இறக்க. ஏந்தல் - வீரவாகு. ஒன்னான் - பகைவன். மாது, ஓ : அசைகள். (405) | | வருவாளிக ணூறிக்கனல் வதனன்கணை தூண்டித் | | | திருவாளன திரதஞ்சிதர் செய்தான்றிரு வாளன் | | | பொருவார்சிலை மாய்த்தான்புக ராளன்கம லத்தோன் | | | தருவான்படை தொட்டானது தனைநோக்கிய வீரன். |
|