பக்கம் எண் :

790தணிகைப் புராணம்

செல்வங்களையு முடையவனாகிய வாகுப்பெயரோனது தேரினைப் பொடி செய்தனன். செல்வமுடையானாகிய வீரவாகு அழன்முகனது போர் செய்யத்தக்க நீண்டவில்லினைக் கெடுத்தனன். குற்றமுடையவனாகிய அழன்முகன் பிரமன் றனக்களித்த பெரிய படைக்கலத்தினைத் தொட்டான். அதனைக் கண்கூடாகக் கண்ட
வாகுப்பெயரோன்.

(வி - ம்.) கனல்வதனன் - அழன்முகன். திருவாளன் - வீரவாகு. புகராளன் - அழன்முகன். வீரன் - வீரவாகு.

(406)

 தக்கன்மக நுங்குந்தனி வீரன்படை தொட்டான்
 திக்கெட்டினு மழல்சிந்துபு சென்றப்படை தாழப்
 புக்கட்டழன் முகனைப்புய வலியானுழி மீண்ட
 தொக்கச்சம ருடலுற்றனர் மூவாயிரர் தலைவர்.

(இ - ள்.) தக்கனென்பவன் இயற்றிய யாகத்தினைக் கெடுத்த ஒப்பற்ற வீரபத்திரப் படையைச் செலுத்தினன். அப்படை எண்டிக்கினும் அழலினைச் சிந்திப்போய் அப்பிரமன் படை தன்னை வணங்கப் புகுந்து அழன்முகனைக் கொன்று புயவலியுடைய வாகுப்பெயரோனிடத்து மீண்டது. அழன்முகனுடன் வந்த தலைவராகிய மூவாயிரவரும் ஒருசேரக் கூடிப் போரினைச் செய்தனர்.

(வி - ம்.) மகம் - வேள்வி. தனிவீரன் என்றது வீரபத்திரனை. சிந்துபு - சிந்தி. அட்டு - கொன்று.

(407)

 வளைந்தார்மிசை வீரன்றழல் வாளித்திரள் சொரிய
 உளைந்தார்சில ரிறந்தார்சில ருருவம்பல துணியாய்
 விளைந்தார்சிலர் விழுந்தார்சிலர் வெருவுற்றனர் சிலர்மெய்
 நெளிந்தார்சில ரவுணப்படை நீறாகிய தன்றே.

(இ - ள்.) வாகுப்பெயரோன் தன் பக்கல்வந்து வளைந்தார்மீது தீயைக் கக்குகின்ற கணைக்கூட்டங்களைச் சொரியச் சிலர் வருந்தினர்; சிலரிறந்தார். தங்கள் வடிவம் பல துண்டங்களாய்ச் சிலர் காணப்பட்டனர். சிலர் கீழே விழுந்தனர். சிலர் அச்சுற்றனர். சிலர் உடம்பு நெளிவுற்றனர். அவுணர் படை சாம்பராயது.

          (வி - ம்.) உளைந்தார் - வருந்தினர். இவ்வாறு படை நீறாகிய தென்க.

(408)

வேறு

 பம்பிய விலக்கர் கணங்கண நாதர் வீரமா புரந்தரன் பலரும்
 நம்பிபா லடுத்தா ரெழுவரைக் காணா னவர்திறம் வினாயுழை நண்ணி
 உம்பர்வா ழியமற் கோலையொன் றேவி யொய்யென வவன்கயி லாய
 நம்பிவீற் றிருந்த வீரரை விடுப்ப நயந்துபோர்க் கமர்ந்தனன் வாகு.

(இ - ள்.) நிறைந்த இலக்கரும், பூதகணங்களும், அக்கணத் தலைவர்களும், வீரமாபுரந்தரனும், ஏனைய பலரும் குணநிறைவினனாகிய வாகுப்பெயரோன்மாட்டுப் பொருந்தினார்கள். அவ்வீரவாகு தன்னையும்,