பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்791

வீரபுரந்தரனையு மொழிந்த எழுவரையுங் காணானாகி அவர்கள் தன்மையை வினவி அப்பறந்தலைக்கட்டங்கி மேலிடத்தில் வாழ்கின்ற தென்றிசைக்கோனுக்கு விரைவாக வோலை யோன்றினை ஏவுதலான் அத்தென்றிசைக்கோன் கயிலாயத்தினையே தங்களுக்குப் பற்றுக் கோடாக விரும்பி வேறொருவர்க்கில்லாத சிறப்புடனிருந்த வீரர்களையனுப்ப விரும்பிப் போர்க்குப் பொருந்தின னென்க.

(வி - ம்.) எழுவராவர் வாகுப்பெயரோனையும், வீரபுரந்தரனையும் ஒழிந்த எழுவர். இவர்களை 362ஆம் செய்யுளில் நால்வரு மூவரு மென்றாராண்டுக் காண்க. முன்னைய நம்பி வீரவாகு, பின்னைய நம்பி விரும்பியெனப் பொருள்படும்; இதனை "நம்பு மேவு நசையு மாகும்" என்னுந் தொல். சொல். உரி. சூத்திரத்தா னுணர்க. உழைநண்ணி - தானவ்விடத்தும் பொருந்தி. அவன் - ஈண்டுத் தென்றிசைக்கோன். ஏவி அவன் விடுப்பப் போர்க்களத் திருந்தனன் வாகு என வினைமுடிவு செய்க.

(409)

 ஒற்றர்போ யங்கி மாமுகன் றபுதி
           யுரைப்பமிக் கழுங்கிய சூர்முன்
 வெற்றிசேர் மூவா யிரரவன் மைந்தர்
           விரசினர் தாழ்ந்துபோர்க் கேவப்
 பெற்றன ரளவில் சேனைகள் சூழப்
           பெயர்ந்தமர்க் களத்தினை யடுத்தார்
 உற்றது பெரும்போ ருலைந்தனர் பல்லோ
           ருடற்றினர் சிலைகொடு மைந்தர்.

(இ - ள்.) தூதுவர் சென்று அழன்முகன் இறந்ததைச் சூரன் முன்னர்ச் சொல்லுதலான் மிகவும் வருந்திய சூரன்முன்னர் அவன் காமக் கிழத்தியின் புதல்வராகிய வெற்றி பொருந்திய மூவாயிரவர் தாழ்ந்து வணங்கிக் கலந்தனர். அதனைக் கண்ணுற்ற சூரன் போர்க்கு ஏவாநிற்க அவர்கள் அளவிலாத சேனைகள் சூழப்பெற்றனராகி ஆண்டு நின்றும் பெயர்ந்து அமர்க்களத்தினை யடுத்தனர். அஞ்ஞான்று பெரும் போர் பொருந்தியது. அம் மைந்தர்கள் சிலையால் பல்லோரை வருத்த வுலைவுற்றனர்.

(வி - ம்.) விரசுதல் - கலத்தல். தாழ்ந்து விரசினர் எனவும், அளவில் சேனைசூழப் பெற்றனரெனவும் கூட்டுக. சிலையொடு - சிலையால், "வாள்கொடு வெட்டினான்" என்றாற்போலக் கொள்க.

(410)

 எதிர்பொரும் பூத ரவுணர்தூஞ் சரத்தி
           னெய்த்தலு மிலக்கர்க டம்மில்
 அதிர்கழல் வீர ராயிர ரெதிர்ந்தா
           ராயிரர் தேரையு மன்னார்
 உதிர்செய வவுண ரொலிசிலை முரித்திட்
           டூருமூ வாயிரந் தேரும்
 பிதிர்படுத் தொழித்துச் சேமத்தே ரிவர்ந்து
           பிறங்கவர் சேமத்தேர் தகர்த்தார்.