| (இ - ள்.) எதிர்த்துப் பொருகின்ற பூதகணங்கள் அவுணர்கள் சிந்தும் கணைகளான் இளைக்க இலக்க வீரருள் வைத்து ஒலிக்கின்ற வீரக்கழலினை யணிந்த ஆயிரம் வீரர்கள் எதிர்ந்தனர். அவர் தேர் ஆயிரத்தினையும் அவுணர்கள் பொடிசெய்ய, அங்ஙனம் பொடிசெய்த அவுணரது ஒலியினைச் செய்கின்ற வில்லினைமுரித்து அவர்கள் ஊர்ந்து வந்த மூவாயிரந் தேரினையும் பொடிபடுத்து நீக்கிச் சேமத்தேரின்கண்ணேறி விளக்கமுறுகின்ற அவ்வவுணர்கள் வைப்புத்தேர் பலவற்றையும் உடைத்தன ரென்க. (வி - ம்.) தூம் - என்னும் பெயரெச்சத்திடையில் நின்ற உயிர் மெய்கெட்டது. உதிர்தல், பிதிர்தல், என்பன பொடிபடுத லென்னும் பொருட்டு. (411) | | மலையொடு மரங்கள் வீசினர் கணையான் | | | மாற்றினர் வீரரா யிரரும் | | | கொலைமுகக் கூற்றிற் பாய்ந்துசூர் மைந்தர் | | | கொடுமர மெறிந்துந்தேர் சிதைத்தும | | | சிலையுறழ் மார்பி னெற்றியும் பொருதார் | | | திண்வலி யாவரு மிழந்தார் | | | உலைவில னாகி யிருந்தவில் விசயன் | | | வஞ்சின முரைத்தம ரேற்றான். |
(இ - ள்.) அங்ஙனந் தேர் உடைபட்ட அவுணர்கள் மலையினொடு மரங்களைப் பறித்து வீசினார்கள். அதனையறிந்த ஆயிரம் வீரரும் கணையால் நீக்கினர். சூரன் புதல்வர்கள் கொலைத்தொழிலைத் தன்னிடத்தே கொண்ட கூற்றினைப் போலப் பாய்ந்து வில்லினை வெட்டியும் தேரினை யுடைத்தும் மலையினையொத்த அவ்வீரர் மார்பின்கண் அடித்தும் போரினைச் செய்தனர். அவ்வீரர்கள் யாவரும் மிக்க வலியினை யிழந்தனர். பகைவராற் சிறிதும் கெடுத லற்றவனாயிருந்த சென்ற போர் தோறும் வில்லால் வென்றியைக் கொள்கின்ற வாகுப்பெயரோன் வஞ்சினங்கூறிப் போரின்கண் எதிர்ந்தனன். (வி - ம்.) விசையன் - ஈண்டு வீரவாகு. சூர் - சூரன். கொடு மரம் - ஒரு படைக்கலன். சிலை- மலை. உறழ் : உவமவுருபு. (412) | | நெட்டயில் வாளி முறைமுறை தொடுத்து | | | நேர்ந்தமூ வாயிரர் சிரமும் | | | மட்டலர் மாலைத் தோள்களுந் தாளு | | | மார்பமும் வேறுவே றறுத்தான் | | | ஒட்டிவீ "றுப்பு மாவியு மெழுந்தா | | | ரொறுத்தொறுத் துறுப்புவீழ் தோறும் | | | பட்டன ரெழுதல் பார்த்துள நினைந்தான் | | | பரனருள் குமரனை விசயன். |
|