| (இ - ள்.) வீரவாகுப் பெயரோன் நீண்டகூரிய கணைகளை வரிசை வரிசையாகத் தொடுத்து மூவாயிரம் வீரர்களின் தலைகளினையும், தேன் விரிந்த மாலையினையுடைய தோள்களையும், தாள்களையும், மார்பங்களினையும், வெவ்வேறாகும் வண்ணம் அறுத்தனன். அவன் அறுத்தலால் நிலத்தின்கண் வீழ்ந்த உறுப்புக்களும் உயிர்களும் பின்னர்ச் சேர்தலான் வீழ்ந்த அவுணர்கள் எழுந்தனர். தடிந்து தடிந்து அவயவங்கள் வீழுந்தோறும் பட்டவர்கள் பின்னரும் உயிர்பெற்றெழுந்தார். இங்ஙன மிவர்கள் மடிந்து உயிர்பெற் றெழுதலினைக் கண்ணுற்று இறைவன் நந்துயர் நீங்க அளித்த குமரப்புத்தேளை நினைந்தன னென்க. (வி - ம்.) ஆவியும் உறுப்பும் ஒட்டி எழுந்தனரெனவும், ஒறுத்தொறுத்துறுப்பு வீழ்தோறும் பட்டனரெழுந்தன ரெனவுங் கூட்டுக. ஒறுத்தல் - தடிதல். (413) | | முன்னெழுந் தருளி யயன்வரம் பெற்றோர் | | | முருக்கொரு படைதொடி னல்லால் | | | அன்னவர் விளியா ரெனவயன் றலையொன் | | | றரிந்தவன் படைகொடுத் திறைனை | | | முன்னின னெடுத்தா னதுதெரி மூவா | | | யிரவரு ளொருவன்முன் மாயை | | | தன்னுறு படையயை விடுத்தனன் விசயன் | | | றாங்கிய படையெதிர் விடுத்தான். |
(இ - ள்.) வாகுப்பெயரவன் நினைத்த வளவின்கண் குமரப்புத்தேள் அவன்முன் னெழுந்தருளி அன்பனே ! இம்மூவாயிரவரும் பிரமன் பக்கலிற் சென்று (யாங்கள் மூவாயிரவரும் ஒரு கணையான் முடியவேண்டும். இன்றேல் யாங்கள் ஒருவராலும் இறவாது உயிர்பெற்றெழ வேண்டுமென்னும்) வரத்தினைப் பெற்றவராவர். ஆதலான் இம் மூவாயிரவரு மொருசேரக் கோறல் செய்யுமொரு படைக்கலத்தினை விடினல்லது இவர் இறவார்கள் என்றுகூறிப் பிரமன்றலை யொன்றினை யரிந்தவனாகிய வைரவன் படைக்கலத்தினைக் கொடுத்து இறைவன் பாசறையடைந்தனன். வீரவாகு இறைவனைச் சிந்தித்து அப்படையினைக் கையிலெடுத்தான். இங்ஙனம் எடுத்தலையறிந்த மூவாயிரவருள் வைத்தொருவன் முன்னர் மாயைப் படையினை விடுத்தான். வாகுப் பெயரோன் கையின்கண் வைத்துள்ள வைரவன் படைக்கலத்தினை அம் மாயைப்படைக் கெதிராக விடுத்தன னென்க. (வி - ம்.) அயன்றலை யரிந்தவன் படை - வைரவன் படை. மாயை தன்னுறுபடை - மாயைப் படை. (414) | | நேர்வரு மவுணப் படையினை விழுங்கி | | | நேர்ந்தமூ வாயிர ருயிரும் | | | ஓருமுண் டடுத்த தொளிர்படை விசய | | | னொண்கர மமரர்கள் வியந்தார் | | | சூரனு மைந்த ரழிந்தது கேட்டுத் | | | துயர்க்கட லழுந்தின னதுகண் |
|