| | டாருயி ரழிந்தோர் ஞாதிய ரெனவிண் | | | ணலரியு மலைகடல் படிந்தான். |
(இ - ள்.) விளங்குகின்ற வைரவன் படைக்கலம் தனக்கெதிரே வருகின்ற அவுணப் படைக்கலத்தினை விழுங்கி மூவாயிரவ ருயிரினையுங் குடித்து வாகுப்பெயரவன் ஒளிபொருந்திய கையின்கட் பொருந்தியது. இச் செயலினைக் கண்ணுற்ற தேவர்கள் இறும்பூதெய்தினர். சூரன் என்பவன் தன்மக்கள் அழிந்ததை ஒற்றராற் கேள்வியுற்றுத் துன்பமாகிய கடலின்கண் ணமிழ்ந்தனன். அதனைக் கண்ணுற்றுச் செங்கதிர்க்கடவுள் நந்தாயத்தவருயிர் நீங்கினரெனக் கருதி அவ்வாலாமை நீங்கும்பொருட்டு அலையினையுடைய கடலின்கண் மூழ்கின னென்க. (வி - ம்.) ஓரும் : அசை. தாயத்தவரிறப்பின் அவ்வாலாமை நீங்கற்பொருட்டு நீராடல் வழக்காறாகலின் செங்கதிர் மண்டிலந் தன்னியல்பிற் கடலின் மூழ்குதலை அம்முறைபற்றி மூழ்குதலாகக் குறித்தலான் இது தற்குறிப்பேற்றவணி. (415) வேறு | | பொருது மீளுவ லென்றுசூர் பொருக்கென வெழுந்தான | | | தரும கோபனன் றாற்றினோன் றாளிணை பணிந்தின் | | | றிருபெ ருஞ்சம ராற்றிவென் றெம்பிரான் முன்னர் | | | வருவ லென்றனன் விடைகொடு வல்விரைந் தெழுந்தான். |
(இ - ள்.) வீரன் இவ்வீரர்களோடு போரினைச் செய்து, மீள்வேனென்று விரைவாக வெழுந்தனன். சூரனைப் பெரிதும் நல்வழியிற் செலுத்து மமைச்சனாகிய தருமகோபனென்பவன் சூரனடியை வணங்கி இன்னேமிக்க பெரிய போரினைச்செய்து வென்றியினை மேற்கொண்டு எம்பிரானே வருவேன் என்று விடைபெற்று மிகவும் விரைந்தெழுந்தன னென்க. (வி - ம்.) நன்றாற்றினான் - நல்வழியிற் செலுத்துபவன்; அமைச்சன். (416) | | மாதி ரத்தமர் புண்டரீ கப்பெயர் வயமா | | | மீதி வர்ந்தனன் விறந்தியல் சேனைக ணாப்பண் | | | போத லுற்றனன் பொருகள மடுத்தனன் புகைந்தான் | | | காது பூதரு மவுணருங் கைகலந் தமர்த்தார். |
(இ - ள்.) திசையின்கண் காவலாகத் தங்கிய புண்டரீகமென்னும் பெயரினையுடைய வெற்றியினையுடைய யானையின் மீதேறிச் செறிந்தியல் கின்ற படையின் நடுவட்போதலுற்றுப் போர்க்களத்தினை யண்மிப் புகைதலுற்றனன். பகைவரைத் தாக்குகின்ற பூதர்களும் அவுணர்களும் கலப்புற்றுப் போரினைச் செய்தன ரென்க. (வி - ம்.) இவர்ந்தனன், போதலுற்றனன், அடுத்தனன் என்பன எச்சமுற்றுக்கள். இத் தருமகோபன் என்பான் புண்டரீகமென்னுந் |