| திசையானையின்பாற் சென்று யான் போர்க்குச் செல்லுங்காலத்து வாகனமாக வேண்டுமெனக் குறையிரந்து கேட்டனன். அத்திசை யானை யவன் வேண்டுகோட் கிணங்கி வாகனமாக வந்ததென்க. (417) | | இலக்க வீரரு மமைச்சர்தங் குழாங்களு மெதிர்ந்தார் | | | நிலக்கட் பூதரு மவுணரு நிரைநிரை வீழந்தார் | | | அலக்க ணுற்றன ரிலக்கரு மமைச்சர்கை மிக்கார் | | | நலக்கும் வீரமார்த் தாண்டனச் செனவழன் றெதிர்த்தான். |
(இ - ள்.) இலக்க வீரர்களும், அமைச்சர் குழாங்களு மெதிர்ந் தார்கள். வரிசை வரிசையாக நிலத்தின்கட் பூதர்களும், அவுணர்களும் விழுந்தார்கள். இலக்கர் போரினுக் காற்றாது துன்பமெய்தினர். அமைச்சர்கள் வெற்றியின்கண் மிக்கார்கள். நன்மையைச் செய்யும் நவ வீரர்களுள் வைத்தொருவனாகிய வீரமார்த்தாண்டன் என்பான் நஞ்சினைப்போல வழற்சியுற்றதிர்ந்தன னென்க. (வி - ம்.) அமைச்சர்தங் குழாம் - அரசருக்குரிய ஐம்பெருங் குழுவுள் ஒரு சாரார். அலக்கண் - துன்பம். (418) | | சிலைவ ளைந்தது நிமிர்ந்தன தீயுமிழ் சரங்கள் | | | தலைவி ழுந்தன தாட்டுணை விழுந்தன தடந்தோள் | | | மலைவி ழுந்தன வாம்பரி விழுந்தன வேழக் | | | குலம்வி ழுந்தன கொடிஞ்சிமான் றேர்களும் விழுந்த. |
(இ - ள்.) வில்வளைந்தது; அவ்வில்லினின்றும் வெளிப்போந்து நிமிர்ந்தனவாகிய கணைகளான் தலைகள் விழுந்தன; காற்றுணைகளும் விழுந்தன; தாவிச்செல்லும் பரித்திரள்களும் விழுந்தன; யானையின் கூட்டங்களும் விழுந்தன. மொட்டினையுடைய குதிரைகள் பூட்டிய தேர்களும் விழுந்தன வென்க. (வி - ம்.) தோளாகிய மலையென்க. வாம்பரி : வினைத்தொகை. மான் - குதிரை. (419) | | கண்ட றத்தினை முனிந்தவன் கார்முகம் வணக்கி | | | மண்டு வெஞ்சரஞ் சொரியவாய் மருப்புவால் காலில் | | | புண்ட ரீகமு முழக்கலிற் பூதர்க டளர்ந்தார் | | | மிண்டு வெய்யவன் றோன்முகத் தொருகணை விடுத்தான். |
(இ - ள்.) இங்ஙனம் வீழ்தலைக் கண்ணுற்றுத் தருமகோப னென்பான் வில்லினை வளைத்து நெருங்கிய கொடிய கணைகளைச் சிந்த வாயானும், மருப்பானும், வாலானும், காலானும், புண்டரீகமென்னும் யானையும் கலக்கலான் பூதர்கள் தளர்ச்சி யுற்றனர். வலியினையுடைய வீரமார்த்தாண்டன் யானையின் முகத்தின்கண் ணொருகணையைச் செலுத்தின னென்க. (வி - ம்.) அறத்தினை முனிந்தவன் - தருமகோபன். கார்முகம் - வில். தோல் - ஈண்டுப் புண்டரீகமென்னும் யானை. (420) |