| | அயர்ந்து நின்றது வேழமங் கதுதெரி யமைச்சன் | | | வயந்த வாதமார்த் தாண்டன்வார் நுதற்கணை யழுத்திச் | | | சயந்த வாதவெள் வேலுமொன் றுறுத்தெறுழ் தடிந்தான் | | | வியந்த வீரமா புரந்தரன் மெலிவுகண் டெதிர்ந்தான். |
(இ - ள்.) தன் நுதலின்கட் கணை பாய்தலான் யானை அயர்வுற்று நின்றது. அங்ஙன மயர்வுற்று நின்றதனை யறிந்த தருமகோபன் சென்ற போர்கடோறும் வெற்றி நீங்குதலிலாத வீரமார்த்தாண்டன் நீண்ட நுதலின்கட் கணையினைச் செலுத்தி வென்றி பெற்றதன்றி மீடலிலாத வெள்ளிய வேற்படை யொன்றினையு முறுவித்து அவன் வலியினை நீக்கினான். பகைவர்கள் வீரத்தினை வியத்தற் கேதுவாகிய வீரமாபுரந்தரன் வீரமார்த்தாண்டன் மெலிவினைக் கண்ணுற்று எதிர்ந்தன னென்க. (வி - ம்.) வயம் - வெற்றி. தவாத - நீங்காத. சயம் - வெற்றி. எறுழ் - வலி.(421) | | புக்க வாசவன் மேற்கணை பொழிந்தன னமைச்சன் | | | தொக்க வாளியி னறுத்தவ னமைச்சன்மேற் றொடுத்தான் | | | மிக்க போர்களிங் குஞற்றுழி வீரன்மே லமைச்சன் | | | தக்க தண்டமொன் றேயினன் றளர்ந்தனன் மகவான். |
(இ - ள்.) இங்ஙனங் கண்ணுற்றுப் புகுந்த வீரபுரந்தரன்மேல் அமைச்சன் கணைகளைச் சொரிந்தனன். அவ்வீரபுரந்தரன் அக்கணைகளைத் தொகுதலைக் கொண்ட கணைகளான் அறுத்து அமைச்சன்மீதும் பல கணைகளைச் சொரிந்தனன். இவ்விடத்துப் பெரும்போர்களைச் செய்யுங்காலத்து வீரன்மீது அமைச்சன் கோறல் செய்யுந் தகுதியினை யுடைய தண்டமொன்றினைச் செலுத்தினன். வீரபுரந்தரன் தளர்ச்சியுற்றன னென்க. (வி - ம்.) வாசவன், மகவான், என்பன வீரபுரந்தரனைக் குறிப்பன. உஞற்றுழி - செய்யுங்கால். (422) | | ஆர்த்து வீரவா குப்பெய ரண்ணன்மு னடுத்தான் | | | பார்த்த மைச்சர்கோன் பற்பல நெடுமொழி கூறித் | | | தூர்த்த னன்பக ழித்திர டூயவன் மெய்யில் | | | போர்த்து நுண்டுக ளாயின பொருப்பெறி கலன்போல். |
(இ - ள்.) இதனைக் கண்ணுற்று வாகுப்பெயரினையுடைய தலைவன் முழக்கி அமைச்சன் முன்னர்ப் பொருந்தினான். அமைச்சர்கள் தலைவனாகிய தருமகோபன் வீரவாகுவைக் கண்ணுற்றுப் பலப்பல வஞ்சின மொழிகளை எடுத்துக்கூறிக் கணைத்திரள்களைத் தூர்த்தனன். அங்ஙனம் தூர்த்த கணைகள் தூய்மையையுடைய வாகுப்பெயரோ னுடலினைப் போர்த்து மலையின்மீது மோதிய மரக்கலன் துகளாவது போல நுண்ணிய துகள்களாயின வென்க. (வி - ம்.) நெடுமொழி - வஞ்சினம். பகழி - கணை. தூயவன் - வீரவாகு. கலன் - மரக்கலம். (423) |