பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்797

 வாகு வோரயில் விடுத்தன னவன்விடு வாளி
 போக வீழ்த்துரம் புகுந்துசெந் நீருண்டு புறத்தில்
 ஏக வீழ்ந்தன னெதிர்ந்திபந் தேரினைத் தாக்க
 வேக நீங்கவண் கவுட்புடைத் தெறிந்தனன் விசும்பில்.

(இ - ள்.) வீரவாகு ஒப்பற்ற வேற்படை யொன்றினை விடுத்தனன். (அவ்வேற்படை) அவ்வமைச்சன் விடுத்தகணை நீங்க நிலத்தின்கண் வீழ்த்தி அவன் மார்பின்கட் புகுந்து செந்நீரைப் பருகிப் புறத்தே செல்லக் கீழே வீழ்ந்தனன். இதனைக் கண்ட யானை எதிருற்று வாகுப் பெயரோன் றேரினைத் தாக்க அவ்வியானையின் வேகங்கெட வளவிய கன்னத்தின்கண் ணடித்து வானின்கண் வீசி யெறிந்தன னென்க.

(வி - ம்.) அயில் - வேல். உரம் - மார்பு. இபம் - யானை. கவுள் - கன்னம்.

(424)

 மறிந்து வெங்கரி வீழ்தலு மதிவலா னுயிர்த்தங்
 கெறிந்து ளானொரு தண்டமற் றதன்வலி யிறுத்தான்
 அறிந்து வச்சிரம் விடுத்தன னதுகரம் பற்றிச்
 செறிந்த மைந்தினான் சென்றவன் மார்பிற வெறிந்தான்.

(இ - ள்.) கொடிய அவ்வியானை மடங்கி நிலத்தின்கண்ணே விழ, மதிவல்லுநனாகிய தருமகோபன் உயிர்ப்புற்றெழுந்து ஒருதண்டத்தினை அப்பொழுது எறிந்தனன். அங்ஙன மெறிந்த தண்டத்தின் வலியினையுங் கெடுத்தனன். அங்ஙனங் கெடுத்தலை யறிந்து வச்சிரப்படை யொன்றினை விடுத்தனன். அவன் விட்ட வச்சிரப்படையினைக் கையாற் பற்றிச் செறிந்த வலியினை யுடையானாகிய வாகுப்பெயரோன் சென்று அவன் மார்புந் தகரும்வண்ண மெறிந்தன னென்க.

          (வி - ம்.) மதிவல்லான் என்றது தருமகோபனை. மைந்தினான் - வீரவாகு.

(425)

 அறமு னிந்தவன் விழுந்தன னடியினாற் சவட்டி
 மறமி குந்தனன் வீரவா குப்பெயர் வள்ளல்
 திறம ழிந்தெழு வேழமுஞ் சேவகற் றுதித்துக்
 குறைமு டிந்ததென் றடுத்தது குறுகுதன் றிசையை.

(இ - ள்.) தருமகோப னென்பான் நிலத்தின்கண் வீழ்ந்தனன். வீரவாகென்னும் பெயரினையுடைய வள்ளல் அவனை அடியினாற்கொன்று வீரத்தின்மிகுந்து விளங்கினான். கீழ்வீழ்ந்ததனாற் றன்வலி யழிந்த புண்டரீகமென்னும் யானையும் சேவகனாகிய வீரவாகுவைத் துதிசெய்து தானணுகுந் திசையைத் தன்குறை இன்றோடு முடிவடைந்த தென்று கருதி அண்மிய தென்க.

(வி - ம்.) வேழம் - புண்டரீகம். சேவகன் - வீரவாகு.

(426)

 தனக்கு மாற்றல னழிவினை யறிந்துதான் காண
 நினைத்நு வந்தென நெடுங்கட லெழுந்தனன் கதிரோன்