| | வினைத்தி றத்தில்வீ ழமைச்சன்பா டறிந்து வெஞ் சூரன் | | | மனத்து நீடிய துயரொடு மருண்டன னிருந்தான். |
(இ - ள்.) வெங்கதிர்க்கடவுள் தனக்குப் பகைவனாகிய தருமகோபன் அழிதலினைத் தெரிந்து தானதனைக் கண்ணுற நினைத்து வந்தாற் போல் நீண்ட கடலின்கட் டோன்றினன். தீவினை வகையான் வீழ்ந்த அமைச்சனாகிய தருமகோபன் இறத்தலையறிந்த வெய்யசூரன் மனத்தின் கண் மிக்க துன்பினோடு மயக்கமுற்றிருந்தன னென்க. (வி - ம்.) மாற்றலன் - பகைவன். அமைச்சன் - தருமகோபன். மருண்டனன் : முற்றெச்சம். (427) | | ஆவி பொன்றினா னெனவொளி யழிந்தவெற் பகைஞன் | | | மேவி வந்தனை புரிந்துதன் றாதைக்கு வேறல் | | | யாவ தும்படா திறைஞ்சுதுங் கந்தனை யென்றான் | | | பாவி பொன்றினுங் கொண்டகோள் விடேனெனப் பகர்ந்தான். |
(இ - ள்.) தருமகோபன் உயிர் நீங்கப்பொற்றா னென்று ஒற்றர் கூற ஒளியிழக்கப்பெற்ற பானுகோபன் றந்தையாகிய வீரனுக்குப் பகைவரை வேறல் சிறிதும் நமக்குளவாகாது. ஆதலான் கந்தப்பெருமானை யடைந்து வழிபாடுசெய்து வணங்குவோமென்று கூறினான். அதற்குப் பாவியாகிய சூரன் இறப்பினும் யான்கொண்ட கோட்பாட்டினை விடேனெனக் கூறினான். (வி - ம்.) ஆவி - உயிர். எல் - ஞாயிறு. எற்பகைவன் - பானுகோபன். தாதைக்குக் கூறினானென்க. யாவதும் - சிறிதும். கோள் - கொள்கை. பொன்றினான் என்பதற்கு உயிர் நீங்கப்பெற்ற பானுகோபனெனப் பொருள் கொள்வாருமுளர். எல் - வெங்கதிர். (428) | | விடைபெற் றாவயி னீங்கினன் விலக்கருந் தெய்வப் | | | படைக ளேந்தினன் பன்னருஞ் சேனைகள் சூழ | | | இடிபொ ரும்பணை யியம்பவேழ் கடல்களும் வளைந்தாங் | | | கடல்செய் போர்க்கள மடுத்தன னழிவுகண் டயர்ந்தான். |
(இ - ள்.) பானுகோபன் தந்தையின்பால் விடையினைப் பெற்று அவ்விடத்தினின்றும் நீங்கி பகைவரான் விலக்குதற்கரிய தெய்வப் படைகளைத் தாங்கிச் சொலற்கரிய சேனைகள்சூழ முழக்கத்தால் இடி யேற்றினை ஒத்த இயங்கள் ஒலிக்க எழுகடலும் முற்றினாற்போலக் கொலைத்தொழிலைச் செய்கின்ற போர்க்களத்தினைக் குறுகி படைகளழிந்து கிடக்கையைக் கண்டு சோர்வுற்றன னென்க. (வி - ம்.) நீங்கினன், ஏந்தினன், அடைந்தனன் : எச்சமுற்றுக்கள். ஆவயின் - அவ்விடத்தினின்றும். பணை - முரசம். அடல் - கொல்லுதல். (429) | | தேற்றி நெஞ்சினை வஞ்சினம் புகன்றுதெவ் வர்கண்மேல் | | | ஆற்றல் வீரரை யேயினன் பூதரு மமர்த்தார் |
|