பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்799

 ஏற்ற தானவர் பூதர்க ளெண்ணில ரிறந்தார்
 காற்றெ னக்கடைக் கூழையிற் பூதர்கள் கலந்தார்.

(இ - ள்.) படைக ளழிவினைக் கண்ணுற்றுச் சோர்வடைந்த பானுகோபன் ஒருவாறு நெஞ்சினைத் தெளிவித்து வஞ்சினங் கூறிப் பகைவர் மேல் வன்மையையுடைய வீரர்களை யேவினன். பூதவீரர்களு மெதிர்த்துப் போரினைச் செய்தனர். எதிர்த்த தானவர்களுள்ளும், பூதர்களுள்ளும் இறந்தன ரளவிலாதார் காற்றினைப்போலப் பின்படையிற் பூத வீரர்கள் பொருந்தினா ரென்க.

(வி - ம்.) அமர்த்தார் - போர் செய்தனர். கூழை - பின்படை.

(430)

 அவுண வன்படை மெலிந்தன வதுகண்டு மணித்தேர்
 பவன வேகத்தி னூர்ந்துராய்ப் பானுவை முனிந்தோன்
 உவண னாகங்க ளுடற்றியாங் குடற்றினன் சிலையால்
 புவன மஞ்சின பூதர்கள் பெரிதுலைந் தனரால்.

(இ - ள்.) பூதவீரர் கூழைப் படையிற் கலந்தபோழ்து வலிய அவுணப்படை மெலிவுற்றன. அதனைக் கண்ணுற்றுப் பானுகோபன் அழகிய தேரினைக் காற்றின் வேகத்தினைக் காட்டினும் வேகமாகச் செலுத்திப் பெயர்ந்து கலுழன் பாம்பினங்களை வருத்தியாங்கு வில்லான் வருந்தினான். உலகெலாமஞ்சின. பூதர்கள் பெரிதும் வருத்தினார்கள்.

(வி - ம்.) மணி - அழகு. பானுவை முனிந்தோன் - பானுகோபன். உவணன் - கருடன்.

(431)

 இரிந்த சேனையுங் கோபன்பா லெய்தின விதனைத்
 தெரிந்து முந்தினன் வீரவா குப்பெயர்ச் செம்மல்
 சொரிந்து சூழ்ந்தன ரவுணர்கள் சொரிந்தபல் படையும்
 வரிந்த வார்சிலைக் கணையினான் மாற்றின னொடியில்.

(இ - ள்.) முன்னர்ப் பூதவீரர்கட்குத் தோல்வியுற்றிரிந்த படைகள் பானுகோபன் பக்கலி லெய்தின. வீரவாகென்னும் பெயரினையுடைய தலைவன் இங்ஙனஞ் சேறலையறிந்து போரினுக்கு முற்பட்டான். அவுணர்கள் அவன்மீது கணைகளைச் சொரிந்து சுற்றினர். வாகுப்பெயரோன் ஒரு நொடிப்பொழுதில் அவர் சொரிந்த பல படைக்கலங்களையும் நீண்டகட்டமைந்த வில்லினின்று விடுங்கணைகளான் நீக்கின னென்க.

(வி - ம்.) கோபன் - பானுகோபன். கணைகளைச் சொறிந்து என்க. வரிந்த - கட்டிய.

(432)

 எண்ணில் வாளிக டொடுத்தட ரவுணர்மே லேவிப்
 புண்ணுஞ் சோரியு மூளையும் பொழிநெடுங் குடரும்