| | நண்ணு மீரலு நாடியும் வழும்புமற் றுறுப்பும் | | | மண்ணி லெங்கணும் வீழ்த்திவண் சயத்தினை விளைத்தான். |
(இ - ள்.) வாகுப் பெயரவன் அவர்கள்மீது அளவில்லனவாகிய கணைகளைத் தொடுத்துச் செலுத்திப் புண்ணும், செந்நீரும், மூளையும் கீழேயிழிகின்ற நீண்ட குடரும், பொருந்தும் ஈரலும், நாடிகளும், வழம்பும், ஏனைய உறுப்புகளும் மண்ணிட மெங்கணும் விழும்படி செய்து வென்றியினை விளைத்தன னென்க. (வி - ம்.) "குடருங் கொழுவுங் குருதியு மென்புந் தொடரு நரம்பொடு தோலும்" என்னும் நாலடிச் செய்யுளும் "நாடியோ என்போ நரம்பு சீக்கோழையேர்" சிவஞான போதவுதாரண வெண்பாவும் ஈண்டு நோக்கத்தக்கன. (433) | | இற்ற தோநம திரும்படை முழுதுமென் றிரங்கிக் | | | கற்றை வெங்கதிர்ப் பகைஞன்முன் சென்றுகார் முகத்துப் | | | பொற்ற வாயிரங் கணைதொடுத் துரம்புகு வித்தான் | | | கற்ற வீரனு மாயிரம் புயங்கலப் பித்தான். |
(இ - ள்.) கூட்டமாகிய கதிர்களையுடைய வெங்கதிர்ப் பகைவன் வாகுப் பெயரோன் முன்னர்ச் சென்று நம் பெரிய படைமுழுதும் இறந்ததோவென் றிரக்கமுற்று வில்லினிடத்துப் பொலிவினையுடைய ஆயிரங்கணை தொடுத்து அவன் மார்பின்கட் புகும்படி செய்தான். விற்றொழிலினை முற்றக்கற்ற வாகுப்பெயரவனும் ஆயிரங்கணைகளைப் பானுகோபன் புயத்தின்கட் கலங்கும்படி செய்தனனென்க. (வி - ம்.) கற்றை வெங்கதிர் என்புழி அடைமொழி வாளா நின்றன. பொற்ற - பொலிவுற்ற. உரம் - மார்பு. வீரன் - வீரவாகு. (434) | | வில்லி றுத்தனன் சூர்மகன் வீரனோ ரயில்வேல் | | | வல்லை யுய்த்தன னெதிர்வரு வாளிக டுமித்துக் | | | கல்ல டுத்தவோ டைத்தட நுதற்கதி யதுமான் | | | றல்ல ழுத்திய மேனியா னறிவுவந் தெழுந்தான். |
(இ - ள்.) சூர்மகனாகிய பானுகோபன் வாகுப் பெயரோன் வில்லினை யறுத்தனன். வீரனாகிய வாகுப் பெயரோன் கூர்மை பொருந்திய வேற்படை யொன்றினை விரைவாக அவன்மேற் போக்கினன். அவ்வேற்படை தனக்கெதிர்வரும் அம்புகளைக் கெடுத்துச் செந்நிறக்கற்கள் பதித்த பட்டத்தினையுடைய பெரிய நெற்றியின்கட் பற்றியது. அங்ஙனம் பற்றியவுடன் மயக்கமுற்று இருளைப்பதித்தாற்போன்ற மேனியையுடைய பானுகோபன் மீண்டும் அறிவுவரப் பெற்றெழுந்தனனென்க. (வி - ம்.) அயில் - கூர்மை. வல்லை - விரைந்து. கல் - மணி. ஓடை - நெற்றிப்பட்டம். மான்று - மயங்கி. (435) | | காற்றின் வெம்படை கனற்படை கதிரவன் படைதேன் | | | ஊற்று தேமல ரவன்படை மால்படை யுகைத்து |
|