(வி - ம்.) பப்பு - பரப்பு. 'பப்பென்ப பரப்போ டொப்பாம்' என்னும் நிகண்டாலறிக. முற்றிய - வளைந்த. எப்பரிசனத்திறைவன் - அகப்பரிசாரம் புறப்பரிசாரம் ஆகிய எவ்வகைப் பரிசனங்களையு முடைய அரசன். எப்பரிசனம் - எல்லாப் பரிசனம். இப்பொருட்டாதலை 'எவ்வெல்லாத் திசையெலா மீண்டிக் காரொடு பவ்வநின் றியம்புறும் பான்மைத் தாயவே' என்னும் சிந்தாமணிச் செய்யுளானறிக. இங்ஙனம் சங்கினங்கள் ஒன்றினையொன்று சுற்றியிருத்தலை, | | 'இப்பியா யிரமே சூழ்ந்த திடம்புரி யென்று கூறும் | | | ஒப்பில்சங் காயி ரஞ்சூ ழுறுவலம் புரியென் றோதும் | | | அப்படி யதுவுஞ் சூழ்ந்த சலஞ்சல மாகு மற்றைத் | | | தப்பிலாச் சலஞ்ச லங்கள் சார்ந்தது பாஞ்ச சன்னியம்' |
எனச் சூடாமணி நிகண்டிற் கூறியிருத்தலா னறிக. (146) | | விலங்கித் தாந்திரை விரைந்து வேறுபல் | | | புலங்க ளிற்பொருள் போக்கி யேற்றுலாம் | | | கலங்கள் காழ்வினை கழிப்பி னார்ந்துசெல் | | | அலங்க லாக்கையி னாவி போன்றன. |
(இ - ள்.) குறுக்கிட்டுத் தாவுகின்ற அலைகளையுடைய கடலின் கண் விரைந்து பலவேறாகிய அயனாடுகளில் தாம் ஏற்றிக் கொணர்ந்த பொருள்களை மாற்றி ஆண்டுள்ள பொருள்களை யேற்றிக்கொண்டு இயங்குகின்ற மரக்கலங்கள், முதிர்ந்த ஒருவினை நீக்கத்தின்கண் ஆகாமியம் ஏறப்பெற்றுச் செல்கின்ற விளங்குகின்ற யாக்கையின்கண்ணுள்ள உயிர்களை யொத்தன. (வி - ம்.) விலங்குதல் - குறுக்கிடுதல். தாம் இடைக்குறை. திரை ஆகுபெயர். வினைகழிப்பு - வினைநீக்கம். ஆர்ந்து - ஆகாமியம் ஏறப்பெற்று. விரைந்துலாம் கலங்கள் எனவும் ஆர்ந்துசெல் ஆவி எனவும் வினை முடிவு செய்க. (147) | | துப்பு நித்திலத் தொகைகள் சங்கினம் | | | உப்பு மீனமு முயர்த்த வாடவர் | | | மைப்பெ ருங்கணார் விலையின் மாற்றுவ | | | ஒப்பின் றொப்பன வுருவு போலவே. |
(இ - ள்.) நெய்தனிலத் தலைவர்கள் (தங்கள் தலைவிமாருடைய அவயவங்களுக்கு ஒப்பாவன எனக் கருதி) பவளத்தினையும், முத்துக்களையும், கூட்டங்கொண்ட சங்கினங்களையும், உப்புகின்ற மீன்களையும் உயர்த்தாநிற்ப, அவைகள், மை தீட்டிய பெரிய கண்களையுடைய அத்தலைவியரால் தங்கள் வடிவம்போல ஒப்பில்லாமல் ஒத்திருப்பன என்று கருதி விலைப்பொருள்களுக்கு மாற்றப்படுவன. (வி - ம்.) ஆடவர்கள் பெண்களுடைய அவயவங்களுக்கு ஒப்பென்று குவிக்க அப்பெண்கள் தம் அவயவத்திற்கு ஒப்பல்லவென்று அவற்றை மாற்றுவார்கள், உப்புமீனம் - உப்பிய மீனம், தங்கள் வடி |